கொரோனா தடுப்பூசி பணி இரட்டிப்பு: வல்லுனர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி பணி இரட்டிப்பு: வல்லுனர்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 28, 2021
Share
பெங்களூரு: ‛'கர்நாடகாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இரட்டிப்பாக்குவதால் மட்டுமே கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும்,'' என, அறிவியல் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.பல்வேறு பல்கலைக்கழக அறிவியல் வல்லுனர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கூறியதாவது:கர்நாடகாவில் உள்ள மக்கள் தொகை; முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின்

பெங்களூரு: ‛'கர்நாடகாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இரட்டிப்பாக்குவதால் மட்டுமே கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும்,'' என, அறிவியல் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல்வேறு பல்கலைக்கழக அறிவியல் வல்லுனர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கூறியதாவது:
கர்நாடகாவில் உள்ள மக்கள் தொகை; முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை; கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பதிவுகளின் அடிப்படையில் அடுத்து வரும் நாட்களில், தடுப்பூசி செலுத்துவது குறித்து அட்டவனை போடப்பட்டது.
இதன்படி, மாநிலத்தில், நாள்தோறும் நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே, ஆக., இறுதியில், கொரோனா பாதிப்பை, 50 சதவீதமாக குறைக்க முடியும். மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதால், தடுப்பூசி செலுத்துவதை இரட்டிப்பாக்க வேண்டும். கர்நாடகாவில், கொரோனா பாதிப்பை, 50 சதவீதத்திற்கும் கீழ் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இதே நிலை தொடரும் போது, மூன்றாம் அலையை கட்டுக்குள் வைப்பதும் சிக்கலாகிவிடும். மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசிடம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், கூடுதல் எண்ணிக்கையில் வழங்குவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், மாநில அளவிலும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X