சீனர்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான் குழுக்கள்: அரசை நம்புவதாக சீனா விளக்கம்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கராச்சி: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்து வெடித்ததில் 9 சீனர்கள் பலியாகினர். இந்நிலையில் இன்று (ஜூலை 28) கராச்சி நகரில் சீன நாட்டவர்களை நோக்கி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். சீனாவானது கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின்

கராச்சி: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்து வெடித்ததில் 9 சீனர்கள் பலியாகினர். இந்நிலையில் இன்று (ஜூலை 28) கராச்சி நகரில் சீன நாட்டவர்களை நோக்கி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.latest tamil newsசீனாவானது கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீர்வளம், எரிசக்தி, சாலை ஆகிய துறைகளில் சீன பொறியாளர்களை ஈடுபடுத்தி பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன நாட்டவர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

ஜூலை மத்தியில் அணைக்கட்டும் பணி ஒன்றிற்காக கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பயணித்த சீன பொறியாளர்களின் பேருந்து வெடித்து சிதறியது. இதில் 9 சீனர்கள் உயிரிழந்தனர். இதனை இயந்திரக் கோளாறால் வாயு கசிவு ஏற்பட்டு நடந்த விபத்து என்றது பாகிஸ்தான். அவர்களை நம்பாமல் பாகிஸ்தானின் தொழில்நுட்ப வல்லுநர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பலுசிஸ்தான் தீவிரவாதிகள் அல்லது பாகிஸ்தான் தலிபான்களின் வேலையாக இருக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.


latest tamil newsஇச்சம்பவத்தை தொடர்ந்து சீன பிரதமர் லீ, வெளிநாடுகளில் உள்ள தமது நாட்டவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் காரில் சென்று கொண்டிருந்த 2 சீனர்களை நோக்கி பைக்கில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். தனிப்பட்ட சம்பவம் என கூறியுள்ள அவர், சீனர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதி செய்யும் என்று முழுமையாக நம்புவதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
29-ஜூலை-202113:44:31 IST Report Abuse
l vijayaraghavan இலங்கையைப் பொறுத்தமட்டில் அங்கு ஓர் அரசாங்கம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. எது நடந்தாலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.ஆனால் பாகிஸ்தானிலோ பிரதமர் என்ற பதவி ராணுவத்தின் கட்டுப் பாட்டில். இந்தியாவை மிக மோசமாக திட்டுவதற்கும் அசதிச் செயல்களை திட்டமிடுவதற்கு என இப்படிப் பட்ட விஷயங்களுக்கே சுதந்திரம் உண்டு. ஆனால் அங்கு தீவிரவாதம், துப்பாக்கி மற்றும் தோட்டா தயாரித்தல் எல்லாம் குடிசைத் தொழிலாக கூட நடந்து வருகிறது. எனவே சீனவின் கடன் கொடுத்து அதில் மூழ்க வைக்கும் உத்தியை பாக். ராணுவம் இது போன்ற வழிகளில் முறியடித்துக் கொண்டிருக்கும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
29-ஜூலை-202105:46:07 IST Report Abuse
 N.Purushothaman இந்த லட்சணத்துல இப்போ ஆப்கானிஸ்தான்ல்ல வேற சீன படைகள் அனுப்பப்படுமாம் ....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூலை-202101:53:24 IST Report Abuse
மலரின் மகள் பாகிஸ்தானையும், ஆள்பவர்களையும், பாகிஸ்தானியர்களையும் பற்றித்தான் சீனாவிற்கு தெரியவில்லை என்றால் அங்குள்ள வெவ்வேறு குழுக்களை பயங்கரவாத அமைப்புக்களை பற்றி கூடவா தெரிந்து கொள்ளாமல் இருக்கிறது சீனா? பாகிஸ்தானியர்களும் அங்குள்ள பல்வேறு பிராந்தியத்து மக்களும் தீவிரவாதிகளும் சீனர்களுக்கு நல்ல பாடம் கற்பித்து தருவார்கள். துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்பவனிடம் வெறும் குச்சியை வைத்து கொண்டு இவர்கள் கொள்ளை அடிக்க முயல்கிறார்கள் இந்த சீனர்கள். இலங்கையில் எப்படி பல்வேறு ஆயுதமேந்திய போராளிகள் இருந்தார்களையோ அதைப்போலத்தான் அனைத்து உள்நாட்டு கலவரங்கள் போர் நடக்கும் தேசங்களிலும் இருக்கும். யாரிடம் சென்று பேசுவது, யாருக்கு எதிராக ராணுவத்தை வைத்து எதிர்ப்பது, என்று யாருக்குமீ தெரியாது. பலுசிஸ்தானியர்கள் முழுதும் பாகிஸ்தானியர்களுக்கும் அவர்களின் ஆட்சியாளர்களுக்கும் எதிரியானவர்கள். அவர்கள் யாரும் பாகிஸ்தானையும் பாகிஸ்தானியர்களையும் ஏற்பதில்லை, விரோதியாகவே பார்க்கிறார்கள். அவர்கள் இந்தியர்களை நேசிக்கவும் இந்தியாவிடம் நட்பு பாராட்டவும் செய்கிறார்கள் என்பது உண்மை. இந்தியா விரும்பினால் அவர்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்ள கூட தயங்கமாட்டார்கள் அதை பெரிதும் விரும்புவார்கள். அந்த நிலைக்கு நாம் சென்றுவிட கூடாது என்பதற்காகவே பாகிஸ்தான் அணுகுண்டு மிரட்டல் விட்டு கொண்டிருக்கிறது. நாம் பலுசிஸ்தானை தனி நாடாக பிரித்து அங்கீகரிக்கவேண்டும். பலூசிட்ஸ்தானியர்களுக்கு ஜிகாதி பெயரில் கொரில்லா யுத்தத்தை ஆப்கானில் வைத்து பயிற்சியை அளிக்கவேண்டும். தேவைப்பட்டால் சில பிரமோஸ் ஏவுகணைகளை கூட வழங்கலாம், ஏதாவது காரணம் சொல்லி கொள்ளவேண்டியது தான். சீன ரோடு போடும் கோடு போடும் ஆனால் அதில் பாகிஸ்தானியர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்வார்கள். சீனர்கள் பயணம் செய்வதை அவர்கள் துப்பாக்கி மூலம் பயம் கொடுத்து தடுத்து விடுவார்கள். கடற்கொள்ளையர்களை தாராளமாக எதிர் கொள்ளலாம் ஆனால் நிலத்தில் அதுவும் தாய் நிலத்தில் இருக்கும் உள்ளூர் கொள்ளையர்களை எதிர்கொள்வது என்பது இயலாது என்பதை சீன புரிந்து கொள்ளும் பாகிஸ்தான் நிலத்தில். கராச்சியில் நாற்சந்தி சிக்கனலில் கூட காமிரா பார்த்து கொண்டிருக்கும் போதே காரில் செல்வோரை துப்பாக்கி காட்டி மிரட்டி மொபைல் போன் பணம் என்று உயர்ந்த பொருளை அபகரித்து கொள்வார்கள். நிறைய பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள், பலர் ஏவுகணைகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வார்டிற்கும் இரண்டு மூன்று தீவிரவாத கும்பல்கள் இருக்கின்றன. அவர்கள் பொதுவாக பொதுமக்களை போன்று தீவிரவாதம் என்ற ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் பெரும் பொருளீட்டு இரண்டு மூன்று துணைவியாருடன் நல்ல செல்வாக்கில் இருக்கிறார்கள். சீனர்கள் தங்களது உணவின் தேவைக்காக பாகிஸ்தானின் கடலை மீன்பிடி துறைமுகங்களை கபளீகரம் செய்திருக்கிறார்கள் என்றும் பஞ்சாபி மாநிலத்தின் விலை பொருட்களை சுரண்டி அவர்கள் தேசத்திற்கு கொண்டு செல்லத்தான் சாலை வசதிகளை செய்திருக்கிறார்கள் என்றும் இப்போது அங்கே நம்ப படுகிறது. விளைவு தெரிகிறது. இது ஒரு பொதுவிசயம் என்றால். மற்றொரு முக்கிய விஷயம் பாகிஸ்தானிற்கு சீன தொடர்ந்து கடன் வழங்கினாலும் அவர்கள் தேசத்திலிருந்து சுரண்டி கொண்டு செல்வதை தடுப்பதற்காகவும், அவர்களின் முதலீட்டிலிருந்து லாபமீட்டவோ அல்லது பயன்பெற செய்யவோ இயலவில்லை என்று காட்டுவதற்காக அவர்களின் ராணுவத்தினர் கூட இப்படி சீனர்களை தாக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சீனா பொதுவாக உழைப்பாளிகள் பொறியலாளர்கள் என்ற பெயரில் அவர்களின் இரண்டாம் நிலை ராணுவ வீரர்களை தான் அனுப்பும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதற்கு, மீன் பிடிப்பதற்கு. ஆயுதங்களை அவர்கள் தாராளமாக அவர்களின் இடங்களில் நிரம்ப வைத்திருப்பார்கள். அவைகள் அனைத்தும் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதற்கும் அவை உய்குர் போராளிகளுக்கு கிடைப்பதற்கும் கூட பெரும் வாய்ப்புகள் இருக்கிறது. சீனா சிறு சிறு நாடுகளாக பிரிவதற்கு முன்பு அதன் பொருளாதாரம் சீர்குலையவேண்டும். அதற்கான வாய்ய்புக்கள் அதிகம். கடன் கொடுத்து விட்டு அதை திரும்ப செலுத்தமுடியாத வகையில் ஒப்பந்தங்களை செய்து கொண்டு அதற்கீடாக சில பகுதிகளின் நிர்வாகம் மற்றும் முழு அதிகாரத்தை பெற்று கொண்டு அங்கே சீன காலணிகளை உருவாக்கி வைத்து ஆட்சி செய்து சுரண்ட முயற்சிக்கிறது சீனா. ஆனால் அவர்கள் அங்கே சென்று ஆளுமை செய்யவோ சுரண்டவோ இயலாத வகையில் இரட்டை வேடம் போடும் அரசுகள் அவர்களின் ராணுவத்தினரை வைத்தே அல்லது தீவிரவாத குழுக்களை வைத்து சீனர்களை தாக்கி அளிப்பதன் மூலம் சீனர்களை வெளியேற்றுவார்கள் கடனும் திரும்ப செலுத்தப்பட்டது. என் பி எ அதிகரிக்கும் அது சீனாவை பாதிக்கும். ஆயுத பலம் கொண்டு பிற நாடுகளை பிடித்து கொண்டால் ஆட்சி செய்வது அங்கே இயலாது அல்லது மிகவும் பொருட்செதத்தை தரவல்லதாகவே அமையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X