சீனர்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான் குழுக்கள்: அரசை நம்புவதாக சீனா விளக்கம் | Dinamalar

சீனர்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான் குழுக்கள்: அரசை நம்புவதாக சீனா விளக்கம்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (6)
Share
கராச்சி: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்து வெடித்ததில் 9 சீனர்கள் பலியாகினர். இந்நிலையில் இன்று (ஜூலை 28) கராச்சி நகரில் சீன நாட்டவர்களை நோக்கி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். சீனாவானது கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின்

கராச்சி: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்து வெடித்ததில் 9 சீனர்கள் பலியாகினர். இந்நிலையில் இன்று (ஜூலை 28) கராச்சி நகரில் சீன நாட்டவர்களை நோக்கி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.



latest tamil news



சீனாவானது கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீர்வளம், எரிசக்தி, சாலை ஆகிய துறைகளில் சீன பொறியாளர்களை ஈடுபடுத்தி பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன நாட்டவர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

ஜூலை மத்தியில் அணைக்கட்டும் பணி ஒன்றிற்காக கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பயணித்த சீன பொறியாளர்களின் பேருந்து வெடித்து சிதறியது. இதில் 9 சீனர்கள் உயிரிழந்தனர். இதனை இயந்திரக் கோளாறால் வாயு கசிவு ஏற்பட்டு நடந்த விபத்து என்றது பாகிஸ்தான். அவர்களை நம்பாமல் பாகிஸ்தானின் தொழில்நுட்ப வல்லுநர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பலுசிஸ்தான் தீவிரவாதிகள் அல்லது பாகிஸ்தான் தலிபான்களின் வேலையாக இருக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.


latest tamil news



இச்சம்பவத்தை தொடர்ந்து சீன பிரதமர் லீ, வெளிநாடுகளில் உள்ள தமது நாட்டவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் காரில் சென்று கொண்டிருந்த 2 சீனர்களை நோக்கி பைக்கில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். தனிப்பட்ட சம்பவம் என கூறியுள்ள அவர், சீனர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதி செய்யும் என்று முழுமையாக நம்புவதாக தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X