மாஜி எம்.எல்.ஏ., மது பங்காரப்பா காங்கிரசில் ஐக்கியம்?| Dinamalar

மாஜி எம்.எல்.ஏ., மது பங்காரப்பா காங்கிரசில் ஐக்கியம்?

Added : ஜூலை 28, 2021
Share
ஹூப்பள்ளி: சொரபா தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மது பங்காரப்பா, நாளை அதிகாரப்பூர்வமாக காங்கிரசில் இணைகிறார்.ஷிவமொகா சொரபா தொகுதியில், 2013ல் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட மது பங்காரப்பா, காங்., வேட்பாளராக போட்டியிட்ட, தன் சகோதரர் குமார் பங்காரப்பாவை தோற்கடித்தார். கடந்த, 2018ல், தொகுதியில் சூழ்நிலை மாறியது. பா.ஜ.,வில் சேர்ந்து போட்டியிட்ட குமார் பங்காரப்பா, ம.ஜ.த., வேட்பாளராக

ஹூப்பள்ளி: சொரபா தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மது பங்காரப்பா, நாளை அதிகாரப்பூர்வமாக காங்கிரசில் இணைகிறார்.
ஷிவமொகா சொரபா தொகுதியில், 2013ல் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட மது பங்காரப்பா, காங்., வேட்பாளராக போட்டியிட்ட, தன் சகோதரர் குமார் பங்காரப்பாவை தோற்கடித்தார். கடந்த, 2018ல், தொகுதியில் சூழ்நிலை மாறியது. பா.ஜ.,வில் சேர்ந்து போட்டியிட்ட குமார் பங்காரப்பா, ம.ஜ.த., வேட்பாளராக இருந்த மது பங்காரப்பாவை தோற்கடித்தார்.
அதன்பின், 2019 லோக்சபா தேர்தலில், ஷிவமொகாவில் காங்., - ம.ஜ.த., ஒருமித்த வேட்பாளராக களமிறங்கிய அவர், பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவிடம் தோற்றார். சில மாதங்களுக்கு முன், காங்கிரசில் சேருவதாக மதுபங்காரப்பா அறிவித்திருந்தார். இதன்படி நாளை அதிகாரப்பூர்வமாக காங்கிரசில் சேர்கிறார்.
ஹூப்பள்ளியின், கோகுலா கார்டனில் நடக்கும் நிகழ்ச்சியில், கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மாநில தலைவர் சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், கர்நாடகா முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X