சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

என்ன சாதிக்கப் போகிறார்?

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
என்ன சாதிக்கப் போகிறார்?'திட்டம் போட்டு பழிவாங்கி விட்டனர். இதற்கு வயதை காரணமாக கூறுவதெல்லாம் அபத்தம்' என புலம்புகின்றனர், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள். கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் எப்போதும் பா.ஜ.,வுக்கு ஆதரவாகத் தான் ஓட்டுப் போடுவர். அதிலும் எடியூரப்பா என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை உணர்ந்ததால் தான், 70 வயதை

 அக்கம் பக்கம்


என்ன சாதிக்கப் போகிறார்?


'திட்டம் போட்டு பழிவாங்கி விட்டனர். இதற்கு வயதை காரணமாக கூறுவதெல்லாம் அபத்தம்' என புலம்புகின்றனர், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள். கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் எப்போதும் பா.ஜ.,வுக்கு ஆதரவாகத் தான் ஓட்டுப் போடுவர். அதிலும் எடியூரப்பா என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இதை உணர்ந்ததால் தான், 70 வயதை கடந்தாலும் எடியூரப்பாவையே முதல்வராக்கி அழகு பார்த்தது பா.ஜ., மேலிடம்.
பா.ஜ.,வில் 'கட்சியிலும், ஆட்சியிலும், 70 வயதை கடந்தவர்களுக்கு இடமில்லை' என்ற எழுதப்படாத விதி பின்பற்றப்படுகிறது. இதில் எடியூரப்பாவுக்கு மட்டும் விலக்கு அளித்தது கட்சி தலைமை. பா.ஜ., மேலிட தலைவர்களை சமாளித்த எடியூரப்பாவால், கர்நாடகாவில் உள்ள உட்கட்சி கோஷ்டி பூசலை சமாளிக்க முடியவில்லை. வரிசையாக டில்லிக்கு படையெடுத்து சென்று, எடியூரப்பாவின் பதவியை பறிப்பதற்கான முயற்சிகளை செய்தனர் அவரது அதிருப்தியாளர்கள்.
அவர்களின் திட்டம் பலித்துவிட்டது. எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டார். இதனால் அதிருப்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 'எங்கள் தலைவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதால் சந்தோஷப்படுபவர்கள், இன்னும் சில நாட்களில் வருத்தப்பட போகின்றனர். அவருக்கு உள்ள செல்வாக்கு, இவர்களுக்கு தெரியாது' என்கின்றனர்
எடியூரப்பாவின் விசுவாசிகள். அதிருப்தியாளர்களோ, 'இதெல்லாம் காமெடியான விஷயம். 78 வயதை கடந்த பின்னும், இவர் என்ன சாதிக்கப் போகிறார்...' என கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்த்மிழகமே - Ameerpet ஐதாபாத்,இந்தியா
29-ஜூலை-202107:00:12 IST Report Abuse
என்னுயிர்த்மிழகமே எதிர்த்ததும் லிங்காயிதனிர் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X