சிறுமி பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு வாலிபர் கைது

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சித்ரதுர்கா: இசாமுத்ரா கிராமத்தில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சித்ரதுர்காவின் பரமசாகரா கிராமத்தில், சமுதாய பவனில் வசித்து வந்த 13 வயது சிறுமி, ஜூலை 23ல், சிறிது தொலைவில் இருந்த திறந்தவெளி கழிப்பிடத்துக்குச் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், பெற்றோர் தேடிப் பார்த்த போது, மக்காச்சோளம் வயலில், பாலியல்

சித்ரதுர்கா: இசாமுத்ரா கிராமத்தில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சித்ரதுர்காவின் பரமசாகரா கிராமத்தில், சமுதாய பவனில் வசித்து வந்த 13 வயது சிறுமி, ஜூலை 23ல், சிறிது தொலைவில் இருந்த திறந்தவெளி கழிப்பிடத்துக்குச் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், பெற்றோர் தேடிப் பார்த்த போது, மக்காச்சோளம் வயலில், பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விசாரணை நடத்திய பரமசாகரா போலீசார், நாகராஜ், 24, என்பவரை கைது செய்தனர். இவர் சிறுமி குடும்பத்தினர் தங்கியிருந்த, சமுதாய பவன் அருகில் வசிக்கிறார். நீண்ட நாட்களாகவே சிறுமி மீது இவர் கண் வைத்திருந்தார்.
சம்பவத்தன்று, பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில், சிறுமி தனியாக கழிப்பிடத்துக்கு சென்றார். இதை கவனித்த நாகராஜ், சிறுமியின் வாயை அடைத்து, மக்காச்சோளம் வயலுக்கு, இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.பின், அந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
சம்பவ இடத்தில் கிடைத்த செருப்பு, கொலையாளியை கண்டுப்பிடிக்க உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X