ரமேஷ் ஜார்கிஹோளி ஆபாச வீடியோ வழக்கில் திடீர் திருப்பம்| Dinamalar

ரமேஷ் ஜார்கிஹோளி ஆபாச 'வீடியோ' வழக்கில் திடீர் திருப்பம்

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
பெங்களூரு: கர்நாடகாவில், சலசலப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியின் ஆபாச வீடியோ வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரை இளம் பெண்ணும், சிலரும் 'பிளாக்மெயில்' செய்ததற்கான சாட்சியங்களை, எஸ்.ஐ.டி., குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். பா.ஜ., அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, 61, இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக

பெங்களூரு: கர்நாடகாவில், சலசலப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியின் ஆபாச வீடியோ வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரை இளம் பெண்ணும், சிலரும் 'பிளாக்மெயில்' செய்ததற்கான சாட்சியங்களை, எஸ்.ஐ.டி., குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பா.ஜ., அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, 61, இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ, சில மாதங்களுக்கு முன் வெளியாகி, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரமேஷ் ஜார்கிஹோளி அமைச்சர் பதவியை, இழக்க நேரிட்டது.
சிலர் தன்னை 'பிளாக் மெயில்' செய்வதாக, பெங்களூரின் சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அதுபோல, அரசு வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் மீது இளம்பெண் கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இவ்விரு வழக்குகளையும் விசாரிக்க, மாநில அரசு, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் ஜார்கிஹோளி, இளம்பெண் உட்பட, சிலரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, தயார் நிலையில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்காக, அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இளம்பெண்ணும், அவரது கூட்டாளிகளும், ரமேஷ் ஜார்கிஹோளியை சதி வலையில் விழ வைக்க, சதி செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இளம்பெண் தன் கைப்பையில் கேமராவை வைத்து, ஜார்கிஹோளியுடன் நெருக்கமாக இருந்ததை பதிவு செய்துள்ளார். பின், கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்ததுடன், ஜார்கிஹோளியின் 'வாட்ஸ் ஆப்' புக்கும் அனுப்பியுள்ளார்.
வீடியோ வெளியாகி விடும் என்ற பீதியில், நெருக்கமான ஒருவர் மூலம், இளம் பெண்ணுக்கு அவர் பணம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஜார்கிஹோளியின் மொபைல் அழைப்பு விபரங்களை போலீசார் ஆய்வு செய்த போது, அவரை இளம்பெண்ணே பலமுறை தொடர்பு கொண்டிருப்பது தெரிந்தது.
இது போன்று பல ஆதாரங்கள், பிளாக்மெயில் கும்பலுக்கு எதிராக கிடைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X