பொது செய்தி

இந்தியா

சுற்றுலா டாக்சி திட்டம்: அரசின் நிதியுதவி கிடைக்காமல் பயனாளிகள் அவதி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பெங்களூரு: சுற்றுலா அபிவிருத்திக்கான சுற்றுலா டாக்சி திட்டத்துக்கு, மத்திய அரசு ஊக்கமளிக்கிறது. ஆனால் மாநிலத்தில், சுற்றுலா துறையின் திட்டங்களுக்கு, நிதியுதவி வழங்குவதில், அலட்சியம் காண்பிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சுற்றுலா அபிவிருத்திக்காகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில், 'சுற்றுலா டாக்சி' திட்டத்தை, கர்நாடக

பெங்களூரு: சுற்றுலா அபிவிருத்திக்கான சுற்றுலா டாக்சி திட்டத்துக்கு, மத்திய அரசு ஊக்கமளிக்கிறது. ஆனால் மாநிலத்தில், சுற்றுலா துறையின் திட்டங்களுக்கு, நிதியுதவி வழங்குவதில், அலட்சியம் காண்பிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்திக்காகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில், 'சுற்றுலா டாக்சி' திட்டத்தை, கர்நாடக சுற்றுலாத்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு டாக்சி வாங்க சுற்றுலாத்துறை சார்பில், தலா இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குகிறது.
மீதி தொகையை, வர்த்தக வங்கி, தேசிய வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில், கடனாக பெற வேண்டும். கடந்த, 2019 - 20ல், சுற்றுலா டாக்சி திட்டத்துக்காக, சுற்றுலாத்துறை விண்ணப்பம் கோரியது. ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை டாக்சி வாங்க, நிதியுதவி வழங்கவில்லை. பலமுறை அலுவலகங்களுக்கு அலைந்தும் பயனில்லை.
அரசிடமிருந்து நிதி வராமல், நாங்கள் எதுவும் செய்ய முடியாது என, அதிகாரிகள் கையை விரிக்கின்றனர். கொரோனாவால் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சுற்றுலா டாக்சி கிடைத்தால், பணியை துவங்கி வாழ்க்கை நடத்தலாம் என, எதிர்ப்பார்ப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
‛‛சில மாவட்டங்களில் நிதியுதவி பற்றாக்குறை உள்ளது உண்மைதான். நிதியுதவி கோரி, நிதித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். நடப்பாண்டு விண்ணப்பம் கோருவது குறித்து, ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்,'' என்று சுற்றுலாத்துறை இயக்குனர் சிந்து ரூபேஷ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X