பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: பெங்களூரு மாநகராட்சி அமைப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரு வி.வி.புரம் மருத்துவமனையில், மாநகராட்சியின் முதல் மருத்துவமனை ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தேவைக்கு பலரும் அலைக்கழிந்து, மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பே, இறந்த சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்தன. மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலை மீண்டும் வராமல்

பெங்களூரு: பெங்களூரு வி.வி.புரம் மருத்துவமனையில், மாநகராட்சியின் முதல் மருத்துவமனை ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தேவைக்கு பலரும் அலைக்கழிந்து, மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பே, இறந்த சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்தன. மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலை மீண்டும் வராமல் இருக்க, மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு திட்டமிட்டு, மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், பெங்களூரு மாநகராட்சியில் முதன் முறையாக, வி.வி.புரம் போபதி மகப்பேறு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி முதன்மை கமிஷனர் கவுரவ் குப்தா மையத்தை துவக்கி வைத்தார். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நிதி வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில், 50 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளுக்கு இருபது படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் வினியோகிக்க முடியும். மேலும், தனியார் தொண்டு நிறுவனம், மாநகராட்சி மருத்துவமனைகளுக்காக, 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளனர். மேலும், சில மருத்துவ உபகரணங்களும் வழங்குவதற்கு கேட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X