பைடனுக்கு எங்கள் நாட்டை பற்றிய அறிவு குறைவு: ரஷ்யா விமர்சனம்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது சமீபத்திய பேச்சில் ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள், எண்ணெய் கிணறுகளை தவிர வேறொன்றும் இல்லை என்றார். அதற்கு ரஷ்ய அதிபர் அலுவலகம், ஜோ பைடனுக்கு நவீன ரஷ்யாவைப் பற்றிய அறிவு குறைவு என்பதை அவரது பேச்சு காட்டிக்கொடுத்துள்ளதாக பதிலடி தந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை தலைமையகம் அமைந்துள்ள வடக்கு விர்ஜினியாவில் அத்துறை பிரதிநிதிகளுடன்

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது சமீபத்திய பேச்சில் ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள், எண்ணெய் கிணறுகளை தவிர வேறொன்றும் இல்லை என்றார். அதற்கு ரஷ்ய அதிபர் அலுவலகம், ஜோ பைடனுக்கு நவீன ரஷ்யாவைப் பற்றிய அறிவு குறைவு என்பதை அவரது பேச்சு காட்டிக்கொடுத்துள்ளதாக பதிலடி தந்துள்ளது.



latest tamil news



அமெரிக்க உளவுத்துறை தலைமையகம் அமைந்துள்ள வடக்கு விர்ஜினியாவில் அத்துறை பிரதிநிதிகளுடன் அதிபர் பைடன் பேசினார். 2022-ல் அமெரிக்காவில் நடக்க உள்ள பிரநிதிகள் சபை தேர்தலில் தலையிட ரஷ்ய அதிபர் திட்டமிட்டுள்ளதாக கூறினார். அணு ஆயுதம், எண்ணெய் கிணறுகள் மற்றும் ஒன்றுமில்லாத பொருளாதாரத்தின் உச்சியில் புடின் அமர்ந்துள்ளதாகவும், அவர் சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்தார். அது அவரை இன்னும் ஆபத்தானவராக்கும் என்றார்.


latest tamil news



இதற்கு பதிலடி தந்து ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ரஷ்யாவில் வேறு எதுவும் இல்லை என்று கூறுவது தவறு. இது நவீன ரஷ்யாவை பற்றிய தவறான அறிவு மற்றும் தவறான புரிதல் ஆகும். தனது நாட்டின் உளவுத்துறை சமூகத்தை கவர பைடன் அவ்வாறு பேசியது போல் தெரிகிறது. இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான முயற்சிகள் நடந்துக் கொண்டிருந்தாலும், அமெரிக்கா ரஷ்யாவின் போட்டியாளர் தான். 2022-ல் நடக்க உள்ள அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
29-ஜூலை-202109:48:10 IST Report Abuse
vbs manian ரஷ்யா மட்டும் அல்ல எந்த நாட்டை பற்றியும் தெரியாது.
Rate this:
Cancel
29-ஜூலை-202105:03:51 IST Report Abuse
அப்புசாமி ரஷ்யா என்ன?அமரிக்காவைப் பத்தியே அமெரிக்கர்களுக்கு தெரியாது. இங்கேருந்து போகும் ஹெச் 1 விசாக்காரன் நிறைய இடங்களுக்குப் போயிருப்பான். உள்ளூர் அமெரிக்கன் அவ்வளவு போக மாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X