பஸ் மீது லாரி மோதல் உ.பி.,யில் 18 பேர் பலி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பரபங்கி:உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நின்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியாயினர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்து உள்ளது.பஞ்சாபின் லுாதியானா வில் இருந்து பீஹார் மாநிலத்திற்கு 130க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று முன்தினம் தனியார் பஸ் புறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் பரபங்கி மாவட்டம்

பரபங்கி:உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நின்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியாயினர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்து உள்ளது.பஞ்சாபின் லுாதியானா வில் இருந்து பீஹார் மாநிலத்திற்கு 130க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று முன்தினம் தனியார் பஸ் புறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் பரபங்கி மாவட்டம் கோட்வாலி பகுதியில் இரவு நேரத்தில் பஸ்சின் அச்சு முறிந்தது. சாலையோரம் பஸ்சை நிறுத்தி பழுதை சரி செய்யும் பணி நடைபெற்றது.

பயணியர் பலரும் இறங்கி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.அப்போது பின்னால் வந்த லாரி பயணியர் மற்றும் பஸ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பலியாயினர். காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியானோர் அனைவரும் பீஹாரைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் என தெரியவந்து உள்ளது.

பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X