முதலீடு காப்புறுதி உத்தரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கி முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்க வகை செய்யும் முதலீடு காப்புறுதி உத்தர வாத மசோதாவை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி யெஸ் வங்கி லஷ்மி விலாஸ் வங்கி போன்ற வங்கிகள் கடன் கொடுத்து அதை திருப்பி வசூலிக்க முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சமீபத்தில்
 முதலீடு காப்புறுதி உத்தரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை  கூட்டத்தில் ஒப்புதல்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கி முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்க வகை செய்யும் முதலீடு காப்புறுதி உத்தர வாத மசோதாவை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி யெஸ் வங்கி லஷ்மி விலாஸ் வங்கி போன்ற வங்கிகள் கடன் கொடுத்து அதை திருப்பி வசூலிக்க முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சமீபத்தில் சிக்கின.இது போல நெருக்கடியில் சிக்கும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் அந்த வங்கிகளில் முதலீடு செய்து உள்ள வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இது போன்ற நெருக்கடியில் சிக்கும் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு காப்பீடு வழங்க முதலீட்டு காப்புறுதி உத்தரவாத கழகத்தை துணை நிறுவனமாக ரிசர்வ் வங்கி துவங்கியது.இதன் வாயிலாக பொதுத்துறை வங்கி தனியார் கூட்டுறவு வெளிநாட்டு வங்கி முதலீடுகளுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றன.இந்த முதலீட்டு காப்புறுதி உத்தரவாத மசோதாவை பார்லி. மழைகால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளில் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான அனைத்து விதமான முதலீடுகளுக்கும் இந்த காப்புறுதி மசோதா பாதுகாப்பு அளிக்கிறது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ''இந்த மசோதா வாயிலாக அனைத்து விதமான முதலீடுகளுக்கும் காப்பீடு பாதுகாப்பு வழங்கப்படும். வங்கி செயல்பாடு நிறுத்தப்படும் நிலையிலும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும்'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X