'பார்லி., கூட்டத் தொடருக்குப் பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன்'

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி:எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், காங்., தலைவர் சோனியாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.''அப்போது, பார்லி., கூட்டத் தொடருக்குப் பின், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பேன்,'' என்றார்.மேற்கு வங்க சட்டசபைக்கு, மார்ச், ஏப்., மாதங்களில் நடந்த தேர்தலில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., ஆட்சி
'பார்லி., கூட்டத் தொடர், பின்னர் , எதிர்க்கட்சிகள் ,ஒன்றிணைப்பேன்'

புதுடில்லி:எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், காங்., தலைவர் சோனியாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.''அப்போது, பார்லி., கூட்டத் தொடருக்குப் பின், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பேன்,'' என்றார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு, மார்ச், ஏப்., மாதங்களில் நடந்த தேர்தலில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வின் கடும் போட்டியை எதிர்த்து, திரிணமுல் காங்., தலைவர், மம்தா பானர்ஜி மாபெரும் வெற்றியைப் பெற்றார். தேர்தல் வெற்றிக்குப் பின், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளார். இதற்காக, டில்லிக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் மம்தா பானர்ஜி.

காங்., மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரை அவர் சந்தித்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.இந்நிலையில், சோனியாவை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது.

அதன்பிறகு, நிருபர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:பா.ஜ.,வை வெல்ல அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்; இணைந்து செயல்பட வேண்டும். சோனியாவுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.வரும், 2024 லோக்சபா தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்த நாட்டுக்கும் இடையேயான தேர்தலாக இருக்கும். தற்போது நடக்கும் பார்லி., கூட்டத் தொடருக்குப் பிறகு, மற்ற கட்சித் தலைவர்களுடன் பேச உள்ளேன். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஜூலை-202122:08:16 IST Report Abuse
Pugazh V மதம் வெறி பிடித்த வர்களை ஊர் ஒன்று கூடித்தான் சிலசமயங்களில் கட்டுக்குள் அடக்க இயலும். அவர்களைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஜூலை-202121:55:49 IST Report Abuse
Pugazh V பாஜகவினருக்கு பயம் ஆரம்பித்து விட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. அதனால் தான், இது நடக்காது. இவர் வரமாட்டார். இவர் வந்தால் அவர் வரமாட்டார் என்று பயத்தில் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
29-ஜூலை-202120:28:12 IST Report Abuse
Nagercoil Suresh மம்தா சேர்ந்தால் அந்த இடம் ....இவரை தேசியக்கட்சிகள் சேர்த்துக்கொள்ளக்கூடாது, கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும், இவருடைய கட்சி நாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டியது, பிகாருக்கு லல்லூ, மேற்கு வங்கத்திற்கு மம்தா இருவரும் சேர்ந்து மாநிலத்தை 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி வைத்துள்ளார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X