காணாமல் போன தலைவர்கள்!

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காணாமல் போன தலைவர்கள்!கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அதன் தலைவர் களை, செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் 'டுவிட்டர்' சமூக வலைதளங்களில் மட்டுமே காண முடிந்தது. தங்கள் வாழ்வை பணயம் வைத்து மக்கள் தொண்டாற்றிய பா.ஜ., தொண்டர்களின் பணி பாராட்டுக்குரியது.ஜே.பி.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,மக்கள் அப்புறப்படுத்துவர்!உத்தர பிரதேச
காணாமல் போன தலைவர்கள்!

காணாமல் போன தலைவர்கள்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அதன் தலைவர் களை, செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் 'டுவிட்டர்' சமூக வலைதளங்களில் மட்டுமே காண முடிந்தது. தங்கள் வாழ்வை பணயம் வைத்து மக்கள் தொண்டாற்றிய பா.ஜ., தொண்டர்களின் பணி பாராட்டுக்குரியது.

ஜே.பி.நட்டா

தேசிய தலைவர், பா.ஜ.,

மக்கள் அப்புறப்படுத்துவர்!

உத்தர பிரதேச நிலவரத்தை அறிய, தங்கள் கட்சி எம்.பி.,க்கள் அனைவரையும் அழைத்து பா.ஜ., தலைமை டில்லியில் கூட்டம் நடத்துகிறது. டில்லிக்கும், உ.பி.,க்கும் இடையிலான துாரம் இதன் வாயிலாக தெளிவாகிறது. நீங்கள் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், மக்கள் விரைவில் உங்களை அப்புறப்படுத்துவர்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி


உரிமைகளை தட்டி பறிக்கிறது!

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு, பீஹார் சட்டசபையில் இருந்து, மத்திய அரசுக்கு இரண்டு முறை கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, 70 சதவீத மக்களின் உரிமைகளை, மத்திய அரசு தட்டிப்பறிக்கிறது.

தேஜஸ்வி யாதவ்

பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்,

ராஷ்ட்ரீய ஜனதா தளம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
01-ஆக-202113:31:29 IST Report Abuse
Ramshanmugam Iyappan அகிலேஷ் யாதவின் கருத்து ஏற்புடையதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X