விதிகளை செயல்படுத்துவதில் அலட்சியம்:'டுவிட்டருக்கு கண்டனம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி " 'தகவல் தொழில்நுட்ப விதிகளை செயல்படுத்துவதில் அலட்சியமாக செயல்படுகிறது' என, 'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனத்துக்கு, டில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, நாட்டில் செயல்படும் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறைதீர் அதிகாரிகள், நம் நாட்டின் குடியுரிமை
விதிகள்,  அலட்சியம், டுவிட்டர் டில்லி, ஐகோர்ட், கண்டனம்

புதுடில்லி " 'தகவல் தொழில்நுட்ப விதிகளை செயல்படுத்துவதில் அலட்சியமாக செயல்படுகிறது' என, 'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனத்துக்கு, டில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, நாட்டில் செயல்படும் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறைதீர் அதிகாரிகள், நம் நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.

முதலில் இதை ஏற்க மறுத்த டுவிட்டர் நிறுவனம், பின், தர்மேந்திர சதுர் என்பவரை குறைதீர் அதிகாரியாக நியமித்தது. ஆனால், பொறுப்பேற்ற சில நாட்களில், அவர் திடீரென பதவி விலகினார்.அடுத்ததாக அமெரிக்காவில் வசிக்கும் ஜெர்மி கெசலை, நம் நாட்டிற்கான குறைதீர் அதிகாரியாக டுவிட்டர் நியமித்தது. இதை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ரேகா பாலி முன்னிலையில் நேற்று நடந்தது.

அப்போது, டுவிட்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'வினய் பிரகாஷ் என்பவர், குறைதீர் அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சேட்டன் சர்மா கூறுகையில், ''குறைதீர் அதிகாரியை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க கூடாது என, தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
''ஆனால் அதை மீறி, டுவிட்டர் ஒப்பந்த அடிப்படையில், குறை தீர் அதிகாரியை நியமித்துள்ளது,''என்றார்.

இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்பதில், டுவிட்டருக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. அதனால் தான், விதிகளை ஏற்பதாக கூறிவிட்டு, அதை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறது.ஒப்பந்த அடிப்படையில் குறைதீர் அதிகாரியை நியமித்துள்ளதை ஏற்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள், நிரந்தரமான குறைதீர் அதிகாரியை டுவிட்டர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-202121:59:56 IST Report Abuse
Laks Giri தடைசெய்வதே ஒரேவழி
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202108:54:14 IST Report Abuse
Kasimani Baskaran ஒரு அந்நிய நிறுவணம் அரசுக்கு சவாலா? பத்துநாள் தடை செய்யலாம். அதன் பின்னர் திருந்தினால் ஓகே. இல்லை என்றால் தடை தொடரும் என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X