சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரங்களுக்கு ஆசிட் ஊற்றி அடாவடி!

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்னுார் : கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சிலர் மரங்களுக்கு ஆசிட் ஊற்றி அட்டூழியம் செய்கின்றனர். மரங்கள் கருகியதும், விழும் அபாயம் இருப்பதாகக் கூறி, அவற்றை வெட்டி விடும் பாதகமும் அரங்கேறுகிறது.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னுாரில் துவங்கி, கோவை மாநகர எல்லையான சரவணம்பட்டி வரை, சாலையின் இருபுறங்களிலும் 20 அடிக்கு ஒரு புளியமரம் என, ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த
மரங்களுக்கு ஆசிட் ஊற்றி அடாவடி!

அன்னுார் : கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சிலர் மரங்களுக்கு ஆசிட் ஊற்றி அட்டூழியம் செய்கின்றனர். மரங்கள் கருகியதும், விழும் அபாயம் இருப்பதாகக் கூறி, அவற்றை வெட்டி விடும் பாதகமும் அரங்கேறுகிறது.

கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னுாரில் துவங்கி, கோவை மாநகர எல்லையான சரவணம்பட்டி வரை, சாலையின் இருபுறங்களிலும் 20 அடிக்கு ஒரு புளியமரம் என, ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பல ஆண்டுகளாக நிழலும், புளியும் தந்து வருகின்றன. சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளும், தொழிற்சாலைப் பகுதிகளும் விரிவடைந்து வருகின்றன. கோவில்பாளையம், குரும்பபாளையம், கணேசபுரம், கரியாம்பாளையம் ஆகிய ஊர்களில், தேசிய நெடுஞ்சாலை முழுவதும், வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் சிலர் ரோட்டோரத்தில் உள்ள மரங்கள், தங்களது நிறுவனத்திற்கு இடையூறாக இருக்கும் எனக்கருதி, மரங்களுக்கு ஆசிட் ஊற்றும் கொடுமை நடக்கிறது.அருகில் உள்ள பல மரங்கள் பசுமையாக இருக்கும்போது வணிக வளாகங்களுக்கு முன்னுள்ள மரங்கள் மட்டும் கருகிவிடும் சம்பவம், தொடர்ந்து நடக்கிறது. ஆசிட் ஊற்றப்பட்ட மரங்கள் சில மாதங்களில் கருகி, காய்ந்து விடுகின்றன.

இதையடுத்து, காய்ந்து போனபோன இந்த மரங்கள், வாகனங்கள் மீது அல்லது பொதுமக்கள் மீது விழும் அபாயம் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அளித்து அதை வெட்டி அகற்றுகின்றனர்.உயர்நீதிமன்றமும், அரசும், வெட்டி அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக, அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை புதிதாக நட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன.

ஆனால், அந்த உத்தரவும் இங்கு பின்பற்றப்படுவதில்லை.அன்னுாரில் இருந்து கோவை செல்லும் வழியில் இருபுறமும் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல், அன்னுார்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில், ஆயிமாபுதுார் பிரிவு, ஒட்டர்பாளையம் பிரிவு, குருக்கிளையம் பாளையம் ஆகிய இடங்களில் பல மரங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு காய்ந்து விடுகின்றன.

வர்த்தக நிறுவனங்களுக்காக அவை வெட்டி அகற்றப்பட்டாலும், அருகில் அல்லது அலுவலக வளாகத்தில் நான்கு புதிய மரங்கள் நடுவதற்கு நெடுஞ்சாலைத் துறையினரும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிட் ஊற்றுவது கண்டறியப்பட்டால், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202105:28:14 IST Report Abuse
அப்புசாமி செய்யறவங்க என்ன செவ்வாய் கிரகத்திலிருந்தா வந்து செய்யப் போறாங்க? கொஞ்சநாளில் சாலை விஸ்தரிப்புக்கு யாருக்காவது காண்டிராக்ட் குடுக்கப்பட்டு அதே மரத்தை வெட்ட வருவாங்க. அவிங்க வேலையாத்தான் இருக்கும். தமிழக போலூஸ் ஸ்காட்லாந்து யார்டு போலூசுக்கு நிகரானது. இது மாதிரி சின்ன கேசெல்லாம் புடிக்கமாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X