அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும் 31ல் ராமதாசுக்கு பாராட்டு விழா

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சென்னை:வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வென்றெடுத்த பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, மூன்று அமைப்புகள் சார்பில், நாளை மறுதினம் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி அறிக்கை:தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு களில், வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, கடந்த பிப்., 26ல் நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு

சென்னை:வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வென்றெடுத்த பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, மூன்று அமைப்புகள் சார்பில், நாளை மறுதினம் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி அறிக்கை:தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு களில், வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, கடந்த பிப்., 26ல் நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.வன்னியர் மக்கள் வாழ்வில், மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வர முழு முதல் காரணமாக இருந்தவர் ராமதாஸ். அவருக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த கட்சியினர் விரும்புகின்றனர்.

அதே சமயம், பா.ம.க.,வினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பா.ம.க., - வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில், இணைய வழியில் ராமதாசுக்கு பாராட்டு விழா, நாளை மறுதினமான 31ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X