உலகத் தர விளையாட்டு பயிற்சி :முதல்வர் அறிவுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உலகத் தர விளையாட்டு பயிற்சி :முதல்வர் அறிவுறுத்தல்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை : ''ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஒலிம்பிக் சர்வதேச
 உலகத் தர விளையாட்டு பயிற்சி :முதல்வர்  அறிவுறுத்தல்

சென்னை : ''ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஒலிம்பிக் சர்வதேச மற்றும் இந்திய அளவிலானப் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்க வேண்டும்.

விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சர்வதேச போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அதிக அளவில் பங்கு பெற்று பதக்கங்கள் வெல்ல வேண்டும்.அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என்பதை பறைசாற்றும் வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள் ஆர்வலர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல் சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையானப் போட்டிகளுக்கும் உயர் தரப் பயிற்சி அளித்தல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பாரம்பரிய சிலம்பம் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளுதல் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமைச் செயலர் இறையன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வவர்மா பங்கேற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X