கடைசி ஓவரில் இந்தியா தோல்வி

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2 வது 'டுவென்டி-20' போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இந்திய வீரர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் ஒத்திவைக்கப்பட்ட 2வது போட்டி,

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2 வது 'டுவென்டி-20' போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



latest tamil news



இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இந்திய வீரர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் ஒத்திவைக்கப்பட்ட 2வது போட்டி, கொழும்புவில் நடந்தது. இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, சேட்டன் சக்காரியா என, 4 பேர் அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.


latest tamil news



இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது ஷனகா பந்தில் ருதுராஜ் (21) அவுட்டானார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், தனஞ்செயா டி சில்வா பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். மெண்டிஸ், ஷனகா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த தவான் (40) ஆறுதல் தந்தார். தேவ்தத் படிக்கல் (29) ஓரளவு கைகொடுத்தார். இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். சஞ்சு சாம்சன் (7), நிதிஷ் ராணா (9) ஏமாற்றினர்.

இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. புவனேஷ்வர் (13), நவ்தீப் சைனி (1) அவுட்டாகாமல் இருந்தனர். சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (11) சுமாரான துவக்கம் தந்தார். சதீரா சமரவிக்ரமா (8), கேப்டன் தசுன் ஷனகா (3) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மினோத் பானுகா (36), குல்தீப் 'சுழலில்' சிக்கினார். ஹசரங்கா (15), மெண்டிஸ் (2) விரைவில் அவுட்டாகினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன.


latest tamil news



சக்காரியா வீசிய 20வது ஓவரின் முதல் 4 பந்தில் 8 ரன் கிடைத்தது. இலங்கை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தனஞ்செயா டி சில்வா (40), சமிகா கருணாரத்னே (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X