மேகதாது அணை கட்டியே தீருவோம் : புதிய முதல்வர் பசவராஜ் விடாப்பிடி| Dinamalar

மேகதாது அணை கட்டியே தீருவோம் : புதிய முதல்வர் பசவராஜ் விடாப்பிடி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (15)
Share
பெங்களூரு :''பிரதமரையும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி பெற்று விரைவில் கட்டப்படும். அணை கட்டுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்,'' என, கர்நாடக புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தும், கர்நாடகா அரசு விடாபிடியாக
மேகதாது அணை ,கட்டியே தீருவோம்  முதல்வர் பசவராஜ் விடாப்பிடி

பெங்களூரு :''பிரதமரையும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி பெற்று விரைவில் கட்டப்படும். அணை கட்டுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்,'' என, கர்நாடக புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தும், கர்நாடகா அரசு விடாபிடியாக உள்ளது.அம்மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர், அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கர்நாடக புதிய முதல்வராக நேற்று பதவியேற்ற பசவராஜ் பொம்மை, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கூறியதாவது:மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அரசு பின் வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த திட்டம் கர்நாடக அரசின் உரிமை. சட்டம் கர்நாடக மாநிலத்துக்கு சாதகமாக உள்ளது.பிரதமரையும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து, அணை கட்டுவதற்கு அனுமதி பெற்று விரைவில் கட்டப்படும். குடிநீருக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், நாளை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X