பொது செய்தி

தமிழ்நாடு

குருவிகளுக்காக தென்னையை விட்டு கொடுத்த விவசாயி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே தென்னந்தோப்பில் துாக்கணாங் குருவிகளுக்காக தென்னை மரங்களை விவசாயி விட்டு கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துாக்கணாங்குருவிகள் நவீன யுகத்தில் அடையாளம் தொலைந்து காண்பதே அரிதாகி வருகிறது. நீரோட்டமுள்ள பகுதிகளில் இருக்கும் பனை மற்றும் கருவேல மரங்களில் கூடு கட்டி வாழும்இவற்றின் எண்ணிக்கை குறைந்து
குருவி, தென்னை,விவசாயி

திருப்புவனம் : திருப்புவனம் அருகே தென்னந்தோப்பில் துாக்கணாங் குருவிகளுக்காக தென்னை மரங்களை விவசாயி விட்டு கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துாக்கணாங்குருவிகள் நவீன யுகத்தில் அடையாளம் தொலைந்து காண்பதே அரிதாகி வருகிறது. நீரோட்டமுள்ள பகுதிகளில் இருக்கும் பனை மற்றும் கருவேல மரங்களில் கூடு கட்டி வாழும்இவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது.திருப்புவனம் அருகே மணல்மேடு கிராமத்தில் நாராயணன் தென்னந்தோப்பில் 30க்கும் மேற்பட்ட தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி வசிக்கின்றன. தென்னை மரங்களில் கூடு கட்டுவது அரிதான சூழலில் ஐந்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் கூட்டம் கூட்டமாக குருவிகள் கூடு கட்டியுள்ளன.குருவிகளின் முட்டை கீழே விழாமல் இருக்க மடிப்பு போன்ற அம்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

குருவிகளின் கூட்டை கலைக்க கூடாது என்பதற்காக அவை கூடு கட்டியுள்ள ஐந்து மரங்களிலும் தேங்காய் வெட்டுவதே கிடையாது.மட்டைகளையும் வெட்டுவது கிடையாது. குருவிகளின் கூடு காற்றினால் கீழே விழுந்தால் புதிதாக கூடு கட்டுகின்றன. பலத்த காற்று காரணமாக ஏராளமான குருவி கூடுகள் கீழே விழுந்துள்ளன, என்றார்.

சக மனிதருக்கே விட்டு கொடுக்காதவர்கள் வாழும் இந்த உலகில் குருவிகளுக்காக ஐந்து மரங்களில் இருந்து குறைந்த பட்சம் 50 நாட்களுக்கு ஒரு முறை 500 தேங்காய் வரை பறிப்பதையே விட்டு கொடுத்து வாழும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - Ameerpet, hyderabad,இந்தியா
30-ஜூலை-202104:47:58 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வருத்தமே படாதீங்க தென்னை முற்றினால் காய் தானாகவே கீழே விழும் பல காலம் கெடாது
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
31-ஜூலை-202107:26:33 IST Report Abuse
RaajaRaja Cholanஅப்படி ஒன்னு ஒண்ணா விழும் தேங்காயை , எந்த வியாபாரிக்கு உபயோகம் இல்லை . வேலை பளு தான் கூடுதல் , அதை ஒரு வியாபாரத்துக்கு உபயோக படுத்த முடியாது....
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202114:25:21 IST Report Abuse
vpurushothaman திருப்புவனம் விவசாயி நீடூழி வாழ்க. அவர்தம் ஜீவகாருண்ய - தயை எண்ணம் பாராட்டுக்குரியது.
Rate this:
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
29-ஜூலை-202113:33:38 IST Report Abuse
magan Good human
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X