அரசியல் செய்தி

தமிழ்நாடு

15 நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை:''விண்ணப்பம் அளித்தால், 15 நாளில் ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேசியதாவது:கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படை தன்மையுடன் கடன் வழங்க வேண்டும். புதிய மருந்தகங்கள் மற்றும் புதிய
 15 நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

கோவை:''விண்ணப்பம் அளித்தால், 15 நாளில் ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேசியதாவது:கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படை தன்மையுடன் கடன் வழங்க வேண்டும். புதிய மருந்தகங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடங்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கவும், அதை தாமதமின்றி வழங்கவும், விவசாயிகள் கேட்கும் உரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக்குழுவினருக்கு 2021--22ம் ஆண்டில், 2,570 கோடி ரூபாய் வழங்க மாநில அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை அடையும் வகையில் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், ''கொரோனா நிவாரணம் இதுவரை பெறாதவர்களுக்கு, வரும் 31ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மனு செய்தால், 15 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேஷன் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லை,'' என்றார்.கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர்கள் பாலமுருகன், காந்திமதி, டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul - Chennai,இந்தியா
29-ஜூலை-202115:31:34 IST Report Abuse
Arul பெரியசாமி சீட்டிங் சாமீ நான் ரேஷன் கார்டு அப்ளை செய்து சீஸ் மோந்த்ஸ் ஆகுது என்னும் வரல, கார்டு பிரின்டிங் கு டூ மொத்த வெயிட் பண்ணுறேன் ஆஃபீஸ்ர்ஸ் கேட்ட வரும் எப்பனு சொல்லமுடியாது சொல்லுறாங்க
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202114:09:13 IST Report Abuse
vpurushothaman பகல் கனவுதான். ரேஷன் கார்டு பதினைந்து நாளில் கிடைக்குமாம் . உதார் உடுறார். பதிவுக்கே பல மாதங்கள் ஆகின்றன. அப்புறம் ஆவண சரி பார்த்தல் - அதிகாரி கையெழுத்துப் பெறல் - அச்சுக்குச் செல்லுதல் என்ற சடங்குகள் முடிய பல மாதங்களாகின்றன என்பததான் நிதர்சனம்.
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
29-ஜூலை-202111:36:00 IST Report Abuse
Ramesh Sundram இந்துக்களுக்கு இந்த சலுகை இல்லை அவர்கள் நொந்து நூடுல்ஸ் அகா வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X