தொற்றுக்கு பின் அலட்சியம் நீரிழிவு, பக்கவாதம் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றுக்கு பின் அலட்சியம் நீரிழிவு, பக்கவாதம் அபாயம்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021
Share
சென்னை : கொரோனா தொற்றுக்கு பின் மக்கள் அலட்சியமாக இருப்பதால், நீரிழிவு, பக்கவாதம், ரத்தநாள அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய பலர், சில வாரங்களில், கொரோனாவுக்கு பிந்தைய விளைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பல்வேறு துணை நிபுணர்களுடன், கொரோனாவுக்கு
 தொற்று, அலட்சியம், நீரிழிவு, பக்கவாதம், அபாயம்

சென்னை : கொரோனா தொற்றுக்கு பின் மக்கள் அலட்சியமாக இருப்பதால், நீரிழிவு, பக்கவாதம், ரத்தநாள அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய பலர், சில வாரங்களில், கொரோனாவுக்கு பிந்தைய விளைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பல்வேறு துணை நிபுணர்களுடன், கொரோனாவுக்கு பிந்தைய கண்காணிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையத்தில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், 28 நாட்களுக்கு பின் பரிசோதனை செய்வதால், பிந்தைய விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என, டாக்டர்கள்அறிவுறுத்துகின்றனர்.

'தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம்அடைந்துள்ளனர். 'இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா வுக்கு பிந்தைய சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றனர்' என, அரசு டாக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தடுக்க, தொற்றுக்கு பின் பரிசோதனை செய்வது அவசியம்.குறிப்பாக, தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின், 28 நாட்கள் கழித்து ஒருமுறை, கொரோனாவுக்கு பிந்தைய கண்காணிப்பு மையத்தில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இந்த மையத்தில் இதயப் பிரிவு, சர்க்கரை நோய், உணவு பிரிவு, ரத்தநாள சிறப்பு பிரிவு உள்ளிட்ட 15 துறைகள் உள்ளன. நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் இருந்தும், நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது குறைந்துள்ளது.

குறிப்பாக, முதல் அலையின்போது, கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தில் 1,327 பேர் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றனர்.இரண்டாவது அலையின்போது 96 பேர் மட்டுமே வந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு வரும்படி அழைத்தாலும், வர மறுக்கின்றனர்.இதன் காரணமாக, சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பின் விளைவுகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news


ரத்தநாள அடைப்பால், 117 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல், கறுப்பு பூஞ்சை பாதிப்பும், கொரோனாவுக்கு பிந்தைய விளைவு தான். எனவே, கொரோனாவில் குணமடைந்தவர்கள் முறையாக, கொரோனாவுக்கு பிந்தைய பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சையை ஆரம்பத்திலேயே மேற்கொண்டால், பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X