அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : முதல்வருக்கு ஒரு கடிதம்!

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வழக்கறிஞர் டி.எஸ்.கோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு... முதல்வராக பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில், தி.மு.க.,வை எதிர்த்தோர் உட்பட பலரும் பாராட்டும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள்.தமிழகத்தை தொழில் வளம் மிக்கதாக மாற்றவும், விவசாயத்தை மேம்படுத்தவும்,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வழக்கறிஞர் டி.எஸ்.கோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு... முதல்வராக பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில், தி.மு.க.,வை எதிர்த்தோர் உட்பட பலரும் பாராட்டும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள்.தமிழகத்தை தொழில் வளம் மிக்கதாக மாற்றவும், விவசாயத்தை மேம்படுத்தவும், அரசுக்கு ஆலோசனைகள் வழங்கபொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளதும் பாராட்டத்தக்கது.latest tamil newsதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் செப்டம்பரிலும், மாநகராட்சி தேர்தல் டிசம்பரிலும் நடக்க உள்ளன. அந்த தேர்தல்கள் முடிந்த பின், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஓட்டு வங்கி பற்றி கவலைப்பட தேவையில்லை. தேசிய தலைமை மீது உங்களுக்கு ஆசை இருப்பதாக தெரியவில்லை. அதனால் அரசியல்வாதியாக இல்லாமல், அனுபவமிக்க தலைவராக செயல்பட வேண்டிய தருணம் இது. முதல்வர்கள் நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், பினராயி விஜயன் ஆகியோரை போல் பக்குவம் பெற்ற தலைவராக செயல்பட வேண்டும். மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறுவது; நவோதயா பள்ளி, 'நீட்' தேர்வு ஆகியவற்றை எதிர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதை கைவிட வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு செலவிடும் நேரத்தை,ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

மேற்கு வங்கம், டில்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களில் மின் உற்பத்தி மற்றும் வினியோகம், வெற்றிகரமாக தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். 'ஆவின்' நிறுவனம் சிறப்பாக செயல்பட, குஜராத் கூட்டுறவு பால் விற்பனை அமைப்பின் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வருவாய் இழப்பை பற்றி கவலைப்படாமல் பீஹார், குஜராத் மாநிலங்களை போல, தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.


latest tamil newsமஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் செயல்படுகின்றன. தமிழகத்திலும் அந்த முறையை பின்பற்றி, கூட்டுறவு சங்கங்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான புதிய திட்டங்கள், விவசாயத்திற்கு தேவையான சீர்திருத்தங்கள், மாநில அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தாய்மொழியான தமிழ் மீதுள்ள பற்று பாராட்டத்தக்கது; ஆனால் மக்களின் உணர்வுகளை துாண்டி, ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியல்ல. பிற மொழி கற்க விரும்புவோருக்கு, அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்தினால், தமிழக மக்கள் உங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-ஜூலை-202119:47:09 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தியாவின் அடுத்த பிரதமராக வரும் தகுதி உடைய நவீன் பட்நாயக் உடன் எந்த ஒரு தகுதியும் இல்லாமல் விபத்தில் முதல்வரான ஒப்பிடுவதே தவறு.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
29-ஜூலை-202120:51:39 IST Report Abuse
Srinivas....@நடராசா...மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைபற்றி பேச உனக்கு துளிகூட அருகதை இல்லை...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-ஜூலை-202119:45:23 IST Report Abuse
Natarajan Ramanathan இதில் ஒன்றுகூட நடக்காது. சுயரூபம் தெரியாமல் சொல்லும் நல்ல யோசனைகள். விழலுக்கு இறைத்த நீர்.
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
29-ஜூலை-202120:09:36 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் நான் கூட நீ எங்கு நடந்து விடும் என்று சொல்லிவிடுவாயோ என்று பயந்தேன் உனக்கு ஸ்டாலின் என்றாலே நவத்துவாரமும் எரியும் அப்புறம் நீ வேறு எப்படி சொல்லுவ...
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
29-ஜூலை-202120:13:38 IST Report Abuse
Srinivas....///இதில் ஒன்றுகூட நடக்காது/// அறிவு ஜீவி சொல்லிவிட்டான் எல்லோரும் கேட்டுக்கொள்ளுங்கள்......
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஜூலை-202119:15:13 IST Report Abuse
Pugazh V . ஏன்யா தமிழ் நாட்டுக்கு எதிராகவே இருக்கீங்க என்று பாஜக வைக் கேட்க வேண்டியது தானே?
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-ஜூலை-202119:48:35 IST Report Abuse
Dhurveshhydrocarben நல்ல திட்டம் , ஏதேன் நல்ல திட்டம் மீத்தேன் நல்ல திட்டம் எல்லாம் TN க்கு ஐயா இந்த அதி நல்ல திட்டங்களை நீங்கள் வளர்ச்சி அடையாத GUJARATH UP என்று கொடுத்து வளர்சி அடைய செய்யலாமே ஏன் TN வளர்ச்சி மீது உங்களுக்கு அதீத அக்கறை...
Rate this:
raja - Cotonou,பெனின்
30-ஜூலை-202112:39:48 IST Report Abuse
rajaஅறிவு கொழுந்து...... ஹைட்ரோகார்பன், மீத்தேன் எங்கே கிடைக்குதோ அங்கே தான் செயல் படுத்த முடியுமுன்னு தெரியாம.. அடுத்தவனுக்கு நீட்டு வேணாமுன்னு சொல்லி தன் புள்ளைய மட்டும் ஆறு லட்சம் செலவு பண்ணி கோச்சிங் கொடுத்து மருத்துவம் சேர்த்த மகான் இவரு........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X