ஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (29)
Share
சென்னை : முதல்வர் ஸ்டாலின் மீதான பழைய வழக்கை, தமிழக அரசு திரும்ப பெற்றதை யடுத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, 2018 மே மாதம், தி.மு.க., சார்பில், சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.போராட்டம் தொடர்பாக,தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவராக இருந்த

சென்னை : முதல்வர் ஸ்டாலின் மீதான பழைய வழக்கை, தமிழக அரசு திரும்ப பெற்றதை யடுத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.



latest tamil news



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, 2018 மே மாதம், தி.மு.க., சார்பில், சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.போராட்டம் தொடர்பாக,தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவராக இருந்த திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏழு பேர் மீது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்தது.


latest tamil news



இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.ஆலிசியா முன் நேற்று வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜராகி, இந்த வழக்கை திரும்ப பெறுவதற்கான அரசாணையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதை ஏற்ற நீதிபதி, முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு பேர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X