பொது செய்தி

இந்தியா

26 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : ''பிரான்சில் இருந்து இதுவரை 26 ரபேல் போர் விமானங்கள் நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து உள்ளன'' என ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.நம் ராணுவம் சார்பில் அதிக அளவில் அயுதங்களை எடுத்துச் செல்வதுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட 36 'ரபேல்' போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்சின் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம்

புதுடில்லி : ''பிரான்சில் இருந்து இதுவரை 26 ரபேல் போர் விமானங்கள் நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து உள்ளன'' என ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.



latest tamil news



நம் ராணுவம் சார்பில் அதிக அளவில் அயுதங்களை எடுத்துச் செல்வதுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட 36 'ரபேல்' போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்சின் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அப்போது ''ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் உரிய கால அட்டவணைப்படி நடைபெறுகிறது. இதுவரை 26 விமானங்கள் வந்து சேர்ந்துள்ளன'' என்றார்.


latest tamil news



இதற்கிடையே விமானப்படையின் கிழக்கு 'கமாண்ட்' 101வது பிரிவில் ரபேல் விமானங்கள் நேற்று சேர்க்கப்பட்டன.மேற்கு வங்க மாநிலம் ஹாசிமாரா விமானப்படை தளத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி பதவுரியா பங்கேற்று ரபேல் விமானங்களை சேர்த்தார்.கடந்த ஆண்டு செம்டம்பரில் 'கோல்டன் ஆரோ' எனப்படும் 17வது பிரிவில் ஏற்கனவே வந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
29-ஜூலை-202113:10:12 IST Report Abuse
 N.Purushothaman மேற்கு வங்க விமானப்படை தளத்துல சில ரபேல் விமானங்கள் இருப்பது சீனாக்காரனுக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கு
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
29-ஜூலை-202110:15:35 IST Report Abuse
vivek c mani வருகை என்பது சரியா? இவையெல்லாம் வந்தாயிற்று.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202108:30:01 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. சீனன் ஆடிப்போகிறானோ இல்லையோ காங்கிரஸ் ஆடிப்போய்விட்டது உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X