காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் ; அரசு பதில்| Dinamalar

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் ; அரசு பதில்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி :'ஜம்மு - காஷ்மீரில், இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு, உரிய நேரத்தில், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்' என, மத்திய அரசு கூறி உள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019 ஆக.,5ல் நீக்கப்பட்டது. இந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க

புதுடில்லி :'ஜம்மு - காஷ்மீரில், இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு, உரிய நேரத்தில், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்' என, மத்திய அரசு கூறி உள்ளது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019 ஆக.,5ல் நீக்கப்பட்டது. இந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பான கேள்விகளுக்கு, லோக்சபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளதாவது:முழுமையாக அமைதி திரும்பிய உடன், உரிய நேரத்தில், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.


latest tamil news



ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில், 2020ல், பயங்கர வாத சம்பவங்கள், 59 சதவீதம் குறைந்து உள்ளது. இந்தாண்டில், ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 32 சதவீதம் குறைந்துள்ளது.

காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்களை, மீண்டும் குடியமர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள, காஷ்மீரி பண்டிட் மற்றும் டோக்ரா ஹிந்து பிரிவைச் சேர்ந்த, 900 குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X