நாட்டு வெடிகுண்டு வீச்சு | Dinamalar

நாட்டு வெடிகுண்டு வீச்சு

Added : ஜூலை 29, 2021
Share
புதுச்சேரி-கொம்பாக்கத்தில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கத்தில், கூட்டுறவு பால் சொசைட்டி அமைந்துள்ளது. இங்கு, வில்லியனுார் செல்லும் மெயின் ரோட்டின் நடுவே, நேற்றிரவு 11:00 மணி அளவில் பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.இதனால், அருகில் உள்ள

புதுச்சேரி-கொம்பாக்கத்தில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கத்தில், கூட்டுறவு பால் சொசைட்டி அமைந்துள்ளது. இங்கு, வில்லியனுார் செல்லும் மெயின் ரோட்டின் நடுவே, நேற்றிரவு 11:00 மணி அளவில் பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.இதனால், அருகில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் அலறியடித்து, வெளியே ஓடி வந்தனர். பொதுமக்களை கண்டதும், வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் சென்று, விசாரணை நடத்தினர்.இச்சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:சில தினங்களுக்கு முன், அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேர், இங்குள்ள மளிகை கடையில் திருட முயன்றனர். அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். போலீசார், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டனர். அவர்கள் தான், எங்களை மிரட்டுவதற்காக வெடிகுண்டு வீசியிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X