மேகதாது அணை விவகாரத்தில் அரசுக்கு தமிழக பா.ஜ., துணை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மேகதாது அணை விவகாரத்தில் அரசுக்கு தமிழக பா.ஜ., துணை'

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (6)
Share
நாகர்கோவில் : மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும் என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது:நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப் படும் என தெரிவிக்கப்

நாகர்கோவில் : மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும் என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.



latest tamil news



கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது:நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப் படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.நீட் தேர்வு உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் பா.ஜ., எதிர்க்கப்போவதில்லை.


latest tamil news



மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒரு போதும் விட்டுத் தரமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X