தமிழ்நாடு

'கோவாக்ஸின்' மருந்து கிடைப்பதில்லை; 2வது தவணைக்கு மக்கள் அலைக்கழிப்பு

Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
திருப்பூர் : கோவாக்ஸின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள, தடுப்பூசி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால், கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு மருந்து, பொதுமக்களுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.இதிலும், கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டத்துக்கு, கோவாக்ஸின் மருந்து
 'கோவாக்ஸின்' மருந்து கிடைப்பதில்லை; 2வது தவணைக்கு மக்கள் அலைக்கழிப்பு

திருப்பூர் : கோவாக்ஸின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள, தடுப்பூசி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால், கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு மருந்து, பொதுமக்களுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.இதிலும், கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டத்துக்கு, கோவாக்ஸின் மருந்து வருவதில்லை. இதனால், ஏப்., மே மாதங்களில் கோவாக்ஸின் செலுத்தியவர்கள், இரண்டாவது தவணைக்கு தேடி அலைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் ஒன்றரை மாதம் கடந்தும் தவிக்கின்றனர்.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாதத்துக்கு ஒருமுறை தான் கோவாக்ஸின் அனுப்புகின்றனர். இந்த மாதம் வரவில்லை. திருப்பூரில் இதுவரை ஏழு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில், 87 ஆயிரம் பேருக்கு கோவாக்ஸின், மீதி 6.32 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவாக்ஸின் திருப்பூர் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில், இரண்டாம் டோஸ் கேட்டு வருவோரின் பெயர், மொபைல் போன் எண் விவரம் பெற்று பதிவேடு பராமரிக்கப்படுகிறது. தடுப்பூசி மருந்து வந்த பின் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X