பொது செய்தி

தமிழ்நாடு

காட்டின் குரலாக உறுமல் சத்தம் ஒலிக்கட்டும்!

Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
வன விலங்குகளில், மிக அழகான தோற்றம் கொண்டது புலி. புலிகள் வாழும் காடு வளமான காடு என்கின்றனர் வன உயிரியல் ஆய்வாளர்கள். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான காடுகள் செழிப்பாக இருக்க புலிகளே காரணம்.உலகில் ஒன்பது வகையான புலிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில், இப்போது தென் சீனப் புலிகள், மலேசியப்புலிகள், இந்தோ- சீனப்புலிகள், சைபீரியப் புலிகள், வங்கப் புலிகள், சுமத்ரா புலிகள் என,
 காட்டின் குரலாக உறுமல் சத்தம் ஒலிக்கட்டும்!

வன விலங்குகளில், மிக அழகான தோற்றம் கொண்டது புலி. புலிகள் வாழும் காடு வளமான காடு என்கின்றனர் வன உயிரியல் ஆய்வாளர்கள்.

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான காடுகள் செழிப்பாக இருக்க புலிகளே காரணம்.உலகில் ஒன்பது வகையான புலிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில், இப்போது தென் சீனப் புலிகள், மலேசியப்புலிகள், இந்தோ- சீனப்புலிகள், சைபீரியப் புலிகள், வங்கப் புலிகள், சுமத்ரா புலிகள் என, ஆறு இனங்கள் மட்டுமே உள்ளன.

உலக அளவில் இருந்த புலிகள் எண்ணிக்கையில், 80 சதவீதம் இந்திய காடுகளில் இருந்துள்ளன. வாழ்விட தேவைகளுக்காக, வனங்கள் அழிக்கப்பட்டதால், வனத்தின் பரப்பு சுருங்கியது. குறிப்பாக, புலிகளின் தோல், எலும்பு, பல் மற்றும் நகம் போன்றவைகளுக்காக, புலிகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. இதனால், இந்தியாவில், 19ம் நுாற்றாண்டில், 40 ஆயிரமாக இருந்த புலிகள் எண்ணிக்கை, 1972-ல், 1,827 ஆக குறைந்தன.

தேசிய விலங்காக, 1973ல் அறிவிக்கப்பட்ட பின், புலிகளை பாதுகாக்க பல்வேறு திட்டம் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதுமலை, களக்காடு, முண்டந்துறை சரணாலயங்களுடன், ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் சரணாலயம் புதிதாக சேர்க்கப்பட்டன.

தமிழக வனப்பகுதியில் வேட்டை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 2006 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இதுவரை மூன்று முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக, 2018ல் நடந்த கணக்கெடுப்பில், நமது நாட்டில், 2,967 புலிகள் இருப்பது தெரியவந்தது.

தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில், 2006ல், 76 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2018ல், 264 ஆக உயர்ந்தது. சத்தியமங்கலம் சரணாலயத்தில் மட்டும், 90 புலிகள் இருப்பது தெரியவந்தது.நமது நாட்டில் உள்ள மொத்த புலிகள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பகுதி, தென்மாநில காடுகளில் உள்ளன. இதில், தமிழக காடுகளில் உள்ள புலிகள் எண்ணிக்கையே அதிகம். காட்டின் குரலாக உறுமல் சத்தம் ஒலிக்க, அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''நமது நாட்டில் ஆறு வகையான நிலத்தோற்றங்கள் உள்ளன. ஆறு நிலப்பகுதியிலும் வாழக்கூடிய ஒரே விலங்கு புலி. அதன் காரணமாகவே, தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில், பழைய நடைமுறையில் புலிகளின் கால் தடங்களை கொண்டு, கணக்கெடுக்கப்பட்டது.

அம்முறை சரியில்லாததால், 2006க்கு பின், நவீன முறையில் நான்கு கி.மீ., சுற்றளவுக்கு கேமரா பொருத்தி, கணக்கெடுக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்த, வேறு சில டெக்னிக்குகளும் கையாளப்படுகிறது. வரும், 2022ல் புலிகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது,'' என்றார்.- இன்று உலக புலிகள் தினம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X