பிரிந்த தம்பதியை 21 ஆண்டுக்குப் பின் சேர்த்து வைத்தது சுப்ரீம்கோர்ட்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : குடும்ப பிரச்னையால் பிரிந்த தம்பதியை 21 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் சேர்த்து வைத்தது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1998ல் திருமணம் நடந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏறபட்டது. மகன் பிறந்த நிலையில் 2000ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். வரதட்சணை கேட்டு தன்னை கணவனும் மாமியாரும் துன்புறுத்துவதாக கூறி 2001ல் போலீசில் பெண் புகார் செய்தார்.இந்த

புதுடில்லி : குடும்ப பிரச்னையால் பிரிந்த தம்பதியை 21 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் சேர்த்து வைத்தது.latest tamil newsஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1998ல் திருமணம் நடந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏறபட்டது. மகன் பிறந்த நிலையில் 2000ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். வரதட்சணை கேட்டு தன்னை கணவனும் மாமியாரும் துன்புறுத்துவதாக கூறி 2001ல் போலீசில் பெண் புகார் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கணவனுக்கு ஒரு ஆண்டு சிறையும் அபராதமும் விதித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கணவன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கணவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது.

இதற்கிடையே விவாகரத்து கோரி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார். கணவனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனைவியும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்தது.அப்போது மனு தாக்கல் செய்த பெண் நீதிபதிகள் முன் ஆஜரானார்.


latest tamil newsஅவரிடம் நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் கணவரை சிறையில் அடைப்பதால் உங்களுக்கு என்ன லாபம். சிறையில் அடைக்கப்பட்டால் கணவரின் வேலை பறிபோய்விடும். அதன்பின் அவரால் உங்களுக்கு ஜீவனாம்ச தொகை கூட வழங்க முடியாது. இதற்குப் பதில் கணவரை மன்னித்து சேர்ந்து வாழுங்கள். உங்கள் குழந்தையையும் நன்றாக வளர்க்க முடியும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதை கேட்ட பெண் மனம் மாறி கணவருக்கு சிறை தண்டனை வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். விசாரணையின் போது ஆஜரான கணவனும் மனைவியை விவாகரத்து செய்ய தொடர்ந்த வழக்கை திரும்ப பெற சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 21 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் இணைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
29-ஜூலை-202113:39:33 IST Report Abuse
LAX உண்மை.. ஏற்கனவே தாயுடன் சேர்ந்து மனைவிக்கு கொடுமை விளைவித்த கணவன்.. தன்னை ஜெயில்ல அடைக்க முயற்சித்ததற்காக, அவளைக் கொன்றுவிட்டு தற்கொலை/கொலை நாடகம் ஆடப்போறான்..
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
29-ஜூலை-202110:33:35 IST Report Abuse
 N.Purushothaman அந்தகாலத்துல நம்ம வீட்டு பெரியவர்கள் ,மூத்த உறவினர்கள் சமரசம் செய்து வாழ வைப்பார்கள் ...ஆனால் இந்த கால பெற்றோர்கள் அவர்களின் ஆலசோணையை கேட்பதோ அல்லது அதற்க்கு கீழ்ப்படிதலோ தங்களின் சுயமரியாதைக்கு அவமானம் என்பது போல் நினைப்பது மட்டுமல்லாமல் எங்கள் வாழ்க்கை எங்கள் பிரச்னை என்கிற ரீதியில் தர்க்கம் செய்வதால் இந்த காலத்தில பல முதிய உறவுகள் பெரியவர்கள் இது போன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை ... இவர்களை பொறுத்தவரை நாலு சுவற்றில் முடிய வேண்டிய பிரச்சனை நீதிமன்றம் சென்றால் தான் முடியும் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர் ....அப்படி நீதிமன்றம் சென்று வெளி உலகிற்கு தெரிந்தாலும் பரவாயில்லை என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர் ....போதாக்குறைக்கு பொய்களை மட்டும் கட்டவிழ்த்துவிடும் திராவிட சினிமாக்கள் ஏதோ உறவுக்காரர் என்றாலே அவர்கள் எல்லாம் விரோதிகள் என்கிற அளவுக்கு ஒரு மாயயையை வெள்ளித்திரையில் கட்டிவைத்து உள்ளார்கள் ...இது போதாதா நம்ம ஆளுங்களுக்கு ....
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
29-ஜூலை-202109:51:36 IST Report Abuse
SKANDH முட்டாப்பசங்க வாழ்க்கையை ஈகோவினால் தொலைத்துவிட்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X