பொது செய்தி

இந்தியா

மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு: பிரதமரிடம் எம்.பி.,க்கள் கோரிக்கை

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பிரதமரிடம்தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.அகில இந்திய அளவில், மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் பங்கேற்க வேண்டும். விதிகளின்படி, மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள
PM Modi, OBC reservation, All India Quota

புதுடில்லி : மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பிரதமரிடம்தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் பங்கேற்க வேண்டும். விதிகளின்படி, மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், இளங்கலையில், 15 சதவீத இடங்கள் மற்றும் முதுநிலையில், 50 சதவீத இடங்களை, மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

இந்த காலி இடங்களில், அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இல்லை.


latest tamil news


இந்திலையில், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மத்திய இணை அமைச்சர் பூபேந்திர யாதவ், பா.ஜ.,- எம்.பி.க்களான கணேஷ் சிங், சுரேந்திர சிங் நாகர் மற்றும் உபி.,யின் ஆப்னா தளம் எம்.பி.,யும், மத்திய இணை அமைச்சருமான அனுப்ரியா படேல் உள்ளிட்டோர், பிரதமர் நரேந்திர மோடிக்குநேற்று ஒரு கடிதம் எழுதினர்.

அதன் வாயிலாக, 'மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில், ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202120:37:36 IST Report Abuse
அப்புசாமி சித்தே பொறுங்கோ. புது கல்விக் கொள்கை அறிவிக்கப்.போறார். அதில் பழைய திண்ணை, கல்லூரி எல்லம் வேண்டாம்னு மாணவர்கள் சொல்லிட்டாளாம். அதனால் ஆன்லைனில் எல்லிருக்கும் சீட் கிடைக்கப் போறதாம். யார் வேண்டும்னாலும் படிக்கலாமாம். இட ஒதுக்கீடு எல்லாம் பழைய விஷயம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202113:56:22 IST Report Abuse
Vena Suna ஒரு இட ஒதுக்கீடும் கிடையாது. வேண்டுமானால் பிச்சை எடுத்து பிழைக்கவும்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-ஜூலை-202114:53:13 IST Report Abuse
Rajஇந்திய மக்கள் அனைவரும் , தர்போது அந்த நிலையில் இருக்கிறார்கள்...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202110:39:13 IST Report Abuse
Kasimani Baskaran அக்கிரமம்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-ஜூலை-202114:02:18 IST Report Abuse
Dhurveshஉண்மை வட நாட்டில் பள்ளிக்கூடங்கள் நிறய திறக்காதவரை மோடியை ஒன்றும் செய்ய இல்லாது எல்லாம் ஆட்டு மந்தைகல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X