எஸ்.சி.ஓ., மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
புதுடில்லி : மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடக்கும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமை, பயங்கரவாதம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க, எஸ்.சி.ஓ., அமைப்பை சேர்ந்த நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, துஷான்பேவில் நடக்கிறது. இதில்

புதுடில்லி : மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடக்கும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.



latest tamil news



ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமை, பயங்கரவாதம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க, எஸ்.சி.ஓ., அமைப்பை சேர்ந்த நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, துஷான்பேவில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்க, தஜிகிஸ்தானுக்கு மூன்று நாள் பயணமாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் சென்றார்.மாநாடு துவங்குவதற்கு முன், பெலாரஸ் ராணுவ அமைச்சர் விக்டர் கேரினின், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி சோயிகு ஆகியோரை சந்தித்து ராஜ்நாத் சிங் பேசினார்.


latest tamil news



இது பற்றி 'டுவிட்டரில்' ராஜ்நாத் வெளியிட்ட பதிவில், ''இந்தியாவுடனான ராணுவ உறவை மேலும் மேம்படுத்த, பெலாரஸ், ரஷ்ய ராணுவ அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்தனர்,'' என கூறியிருந்தார். ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X