சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
மதுரை : மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் 32, ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார். அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக
 டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'

மதுரை : மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் 32, ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார். அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன்பேரில் ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றார்.

சிறிது துாரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு அர்ஷத்தை இறக்கிவிட்டார். பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்துவிடுவேன் என மிரட்டினார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரணையில் உண்மை எனத்தெரிந்தது.

வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட 5 பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


உண்மையில் நடந்தது என்ன


போலீசார் கூறியதாவது: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் கூறியதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். இதை பாண்டி, கார்த்திக் மற்றும் செட்டியார் என்பவர் மூலம் அறிந்த வசந்தி, விசாரிப்பது போல் அழைத்துச்சென்று மிரட்டி பணம் பறித்துள்ளார். 'டப்ளிங்' செய்வது குற்றம் என்பதால் இவ்விவகாரத்தை வெளியே அவர் சொல்ல மாட்டார் என நினைத்துள்ளார்.

பல முறை அர்ஷத் பணம் கேட்டு நச்சரிக்க, ஒரு கட்டத்தில் 'என் பிள்ளை சத்தியமா உன்னிடம் பறிமுதல் செய்த பையில் நோட்டு புக்தான் இருந்தது. பணமே இல்லை. தொடர்ந்து நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்' என மிரட்டியுள்ளார். இதெல்லாம் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்தே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
31-ஜூலை-202107:38:42 IST Report Abuse
RajanRajan டிஸ்மிஸ் பண்ணுங்க அல்லது என்கவுன்ட்டர் பண்ணுங்க. இப்படி பட்ட அரசு ஊழியரா மக்களுக்கு சேவை செய்ய போவுது. தத்திகள்.
Rate this:
Cancel
gilji - tanjore,இந்தியா
30-ஜூலை-202115:59:55 IST Report Abuse
gilji "இன்ஸ்பெக்டர் வசந்தி", நான் எடுக்க போற அடுத்த படத்துக்கு , இதுதான் டைட்டில் ....இவரு பெரிய டைரக்டர் போல , இதுக்கு முன்னாடி என்ன படம் எடுத்தாருன்னு தானே கேட்கறீங்க ................"மாவுக்கட்டு"
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் வேலைக்கு வந்தது எப்டின்னும் விசாரிங்க FIR ல் குற்றங்கள் பலமடங்காக பெருகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X