ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க குழு; களமிறங்கியது அறநிலையத்துறை

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
கோவை: ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும்
ஆக்கிரமிப்பு நிலங்கள், அறநிலையத்துறை

கோவை: ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், நியாயமான வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர்கள் தலைமையில் மூன்று குழுக்கள் உருவாக்கியுள்ளார்.

இத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் இதுவரை அதிகாரிகளை சரிக்கட்டியும், அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமாளித்து வந்தனர். ஆக்கிரமிப்பு நிலங்களை தங்களுக்கு சொந்தமானதாக பயன்படுத்தி வந்தனர். இனி, அது நடக்காது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை எப்போது, எந்த அதிகாரி அகற்றுவார், எந்த அதிகாரி கோப்புகளை பார்க்கிறார் போன்ற விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புதாரருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி, பதில் பெறப்படுகிறது. அதன் பின்பே, ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது' என்றனர்.


latest tamil news


சமீபத்தில் ஆய்வுக்கு வந்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், மருதமலை அடிவாரத்தில், சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக, தி.மு.க.,வினர் புகார் கூறினர். இதுதொடர்பாக, சர்வே எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க, அமைச்சர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட இடம், சோமையம்பாளையம் ஊராட்சி, கோவை மாநகராட்சி மற்றும் மருதமலை கோவில் என மூன்று பிரிவினருக்கு பாத்தியப்பட்டதாக இருக்கிறது. நில அளவைத்துறை மூலமாக ஆய்வு செய்து, எந்த துறைக்குச் சொந்தமானது என இறுதி செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
29-ஜூலை-202115:55:20 IST Report Abuse
Elango இந்துக்கள்,கிறிஸ்டியன்,முஸ்லிம் அனைவருமே நம் உடன் பிறப்புகள் என்று கூறுபவர்கள் தான் இந்தியாவில் வாழ தகுதியானவர்கள்....
Rate this:
Arunkumar J - Tuticorin,இந்தியா
29-ஜூலை-202116:33:06 IST Report Abuse
Arunkumar Jஏன் இதை இந்துக்களுக்கு மட்டும் சொல்கிறீர்கள்.. மற்றவர்களுக்கு அதுவும் இந்தியன் என்ற உணர்வு இல்லாத மக்களிடம் ஏன் சொல்ல மாட்டீர்கள்??? பயமா..??? அல்லது இந்துக்கள் என்றல் இளக்காரமா...???...
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
29-ஜூலை-202115:52:17 IST Report Abuse
Elango ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் திருவள்ளுவர் சிலையை வட மாநிலத்தில் நிறுவ கொன்று சென்றார் அங்கு உள்ள சங்கிக்கள் வள்ளுவர் ஒரு திராவிடன் இவரை இங்கு வைக்க அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தினர் பின் அந்த சிலை எங்கு சென்றது என்று தெரியவே இல்லை...இந்த செய்தி இங்கு உள்ள தமிழக சங்கிகளுக்கும் தெரியும் தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனர்....
Rate this:
Senthil Raman - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202116:59:01 IST Report Abuse
Senthil Ramanபுதுக்கதையாக இருக்கிறது.....
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
29-ஜூலை-202115:45:38 IST Report Abuse
Elango பிஜேபி மற்றும் RSSஅமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் ஒரே ஒரு முறை தமிழ் வாழ்க.. தமிழ்த்தாய் வாழ்க..வாழ்க வாழ்க.. என்று கூறுங்கள் பார்க்கலாம்.....
Rate this:
Suresh Kumar - Salem,இந்தியா
29-ஜூலை-202116:38:03 IST Report Abuse
Suresh Kumarநீங்கள் ஒரேயொரு முறை ஜெய்ஹிந்த் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X