ஒலிம்பிக்கில் காலிறுதியில் கால் பதித்த பி.வி.சிந்து, சதீஷ்குமார்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
டோக்கியோ: 32வது ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பாட்மின்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆடவர் குத்துச்சண்டையில் சதீஷ்குமாரும் காலிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றனர். அதேபோல், ஆடவர் ஹாக்கி அணியும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், பாட்மின்டன் லீக் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, 'ஜே' பிரிவில்
Olympics, IND, Tokyo2020, Badminton, Boxing, Hockey, Archery, PVSindhu, SathishKumar, ஒலிம்பிக், டோக்கியோ, இந்தியா, பிவிசிந்து, பாட்மின்டன், சதீஷ்குமார், குத்துச்சண்டை, ஹாக்கி, வில்வித்தை

டோக்கியோ: 32வது ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பாட்மின்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆடவர் குத்துச்சண்டையில் சதீஷ்குமாரும் காலிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றனர். அதேபோல், ஆடவர் ஹாக்கி அணியும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், பாட்மின்டன் லீக் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, 'ஜே' பிரிவில் இடம் பெற்றிருந்தார். முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, தனது மூன்றாவது போட்டியில் டென்மார்க்கின் பிலிச்பெல்ட்டை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர், காலிறுதிக்கு முன்னேறினார். நாளை (ஜூலை 30) நடைபெறவுள்ள காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதவுள்ளார்.


latest tamil news



அதேபோல், ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார், ஜமைக்கா வீரர் பிரவுனை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். உஜ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பகோடிர் ஜலோலோவை சந்திக்கிறார்.


latest tamil news




இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அர்ஜெண்டினா உடன் மோதிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.


latest tamil news


ஆடவர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


latest tamil news




மேரிகோம் தோல்வி:

குத்துச்சண்டையில் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா மோதினார்கள். இதில், மேரிகோம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-ஜூலை-202115:27:31 IST Report Abuse
Vijay D Ratnam தங்கத்தோடு வா சிந்து. 135 கோடி இந்தியர்கள் உன் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-202114:40:12 IST Report Abuse
Kasimani Baskaran வெற்றிபெற வாழ்த்துகள்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
29-ஜூலை-202114:34:07 IST Report Abuse
sundarsvpr திறமைக்கு வெற்றி உண்டு. சிந்து சிறந்த ஆட்டக்காரர் என்பதனை பலபோட்டிகளில் நிரூபித்துள்ளார். நம் நாட்டு ஹாக்கி அணி நல்ல பயிற்சி போட்டிகளால் பலம் பெற்றுள்ளது. சதீஸ்குமார் நல்ல குத்துசண்டை வீரர். இவர்களால் நம் நாட்டிற்கு பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒற்றை எண்ணம் பதக்கம் வெற்றி கொண்ட வீரர் திறமைக்கு கிடைத்த பரிசு. அடுத்த உலக போட்டியில் இரட்டை இலக்கம் பதக்கம் பெற்றால் நாட்டிற்கு பெருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X