ஆப்கன் பிரச்னைக்கு அமெரிக்காவே காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளதற்கு அமெரிக்காவே காரணம்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளார்.கடந்த 2001-ம் ஆண்டு செப்.,1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பின் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான்
Taliban, Afghanistan, US, really messed, Pakistan, PM, Imran Khan, ஆப்கன், பிரச்னை, தலிபான்கள் தாக்குதல், அமெரிக்கா, காரணம், இம்ரான் கான், குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: 'ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளதற்கு அமெரிக்காவே காரணம்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்.,1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பின் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறின. இதனால் அங்கு மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news


இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நெருக்கடி மிகுந்த சூழலுக்கு அமெரிக்கா தான் காரணம். 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆட்கொண்டது. தலிபான் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவின் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்தனர். ஆப்கன் படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. ஆப்கன் பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், அமெரிக்க அதை கையில் எடுத்தது.

இப்போது அரசியல் தீர்வுக்கு தலிபான்கள் தயாராக இல்லை. தலிபான்கள் பாரம்பரிய பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்டம் தொடங்கி உள்ளது. இது தொடர்ந்தால், பாகிஸ்தானில் உள்ள பாஸ்தூன் இன மக்களும் தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202120:14:19 IST Report Abuse
Nagarajan D அடேய் கூறு கெட்ட கோமானே உலகத்தில் உள்ள அனைத்து தீவிரவாத பிரச்சனைக்கும் உங்க இஸ்லாம் தானடா காரணம்...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202120:12:30 IST Report Abuse
Rajagopal இப்போது இந்தியாதான் பாகிஸ்தானின் சனநாயகம் அதன் ராணுவத்தின் பிடியில் இருக்கிறது என்று உலகம் பூராவும் வதந்தியைப் பரவ விட்டிருக்கிறது என்று கிளம்பியிருக்கிறார் இம்ரான். பாகிஸ்தானியர்கள் தாங்கள் ஏதோ விரலை சப்பிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் போல நினைத்துக்கொண்டு எல்லாரையும் பழி சுமத்தி, தாங்கள் செய்யும் அட்டூழியங்களை ஒப்புக்கொள்ளாமல் ஓட்டலாம் என்று பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
29-ஜூலை-202116:13:30 IST Report Abuse
vbs manian இப்படி பேசாவிட்டால் இவருக்கும் ஆபத்துதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X