பொது செய்தி

இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா: ஊரடங்கு அறிவிப்பு

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை31 மற்றும் ஆக.,1) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. இதனிடையே, நிலைமை குறித்து ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை , கேரளாவிற்கு மத்திய அரசு மீண்டும் அனுப்பி வைத்து உள்ளது.கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்று இரண்டாம் நாளாக 22 ஆயிரத்தை
kerala, corona, coronavirus, covid, lockdown, central team, கேரளா, கொரோனா, கொரோனா வைரஸ். ஊரடங்கு, கோவிட், மத்திய குழு,

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை31 மற்றும் ஆக.,1) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. இதனிடையே, நிலைமை குறித்து ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை , கேரளாவிற்கு மத்திய அரசு மீண்டும் அனுப்பி வைத்து உள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்று இரண்டாம் நாளாக 22 ஆயிரத்தை கடந்தது. மாநிலத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் 22,129 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,96,902 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 22,056 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 11.2 சதவீதமாக இருந்தது. 17,761 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் 131 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 16,457 ஆக அதிகரித்தது. 1,49, 534 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், 4,46,211 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளது.


latest tamil news




இந்நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்க மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது. தேசிய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அதேபோல், தேசிய அளவில் அதிக பாதிப்பு கொண்ட முதல் 10 மாவட்டங்களில், கேரளாவின் கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் இடம்பிடித்து உள்ளது. கடந்த 4 வாரங்களில் மட்டும் இந்த மாவட்டங்களில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, மாநில அரசிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

ஜூலை முதல்வாரத்தில், மத்திய குழுவினர் கேரளா வந்து ஆய்வு செய்து சென்றனர். ஆனால், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், நிலைமை குறித்து ஆராய்வதற்காக மீண்டும் 6 பேர் கொண்ட குழுவை மீண்டும் மத்திய அரசு அனுப்பி வைத்து உள்ளது. இவர்கள், மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
31-ஜூலை-202100:20:49 IST Report Abuse
M  Ramachandran கேரளாவில் படித்த மக்கள் தொகை அதிகம் என்கிறார்கள். அப்படியும் கட்டு படுத்த முடிய வில்லையா?என்னகு குறை இருக்கிறது என்று குறையை களைந்தால் மக்களுக்கு நன்று.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
29-ஜூலை-202120:12:13 IST Report Abuse
M  Ramachandran பினாயில் ராயனுக்கு மரண அடி கிடைத்தால் தான் அடஙகுவார். முன்பு கோரானவை கட்டுக்குள் கொண்டு வந்த பெ ண்மணியை அவருக்கு நள்ல பெயர் ஏற்பட்டவுடன் மந்திரி சபையிலிருந்து கழட்டிவிட்டுவிட்டார். அனுபவிக்கட்டும். எல்லாம் தான் என்ற தலைக்கனம் தூக்குகிறது.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202120:11:48 IST Report Abuse
Nagarajan D உண்டியல்கள் எங்கே இருந்தாலும் வரவும் கேரளாவை பார் என சொன்ன அனைத்து விளங்காதவனுங்களும் இந்த செய்தியை படிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X