அலாஸ்காவில் சக்திவாய்ந்த பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
வாஷிங்டன்: அலாஸ்காவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.அமெரிக்காவின் அலாஸ்காவில் மிகப்பெரிய நகரான அன்கோரக்கில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ளது பெரிவில்லி. இந்த நகரில் இருந்து 56 மைல் தொலைவில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது. இதனால், அப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில்,
அலாஸ்கா, பூகம்பம், சுனாமி, அமெரிக்கா, எச்சரிக்கை

வாஷிங்டன்: அலாஸ்காவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

அமெரிக்காவின் அலாஸ்காவில் மிகப்பெரிய நகரான அன்கோரக்கில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ளது பெரிவில்லி. இந்த நகரில் இருந்து 56 மைல் தொலைவில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது. இதனால், அப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில், அடுத்த சில மணி நேரங்களில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


latest tamil news




அலாஸ்காவில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. ஆனால், பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த 1964 ல் ரிக்டரில் 9.2 என்ற அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. சுனாமியும் தாக்கியது. இதனால் அன்கோர்க் உள்ளிட்ட சில பகுதிகள் பேரழிவை சந்தித்தது. 250 பேர் உயிரிழந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X