வீரர்களால் கொரோனா அதிகரிக்கிறதா? ஒலிம்பிக் நிர்வாகி மறுப்பு

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 23ம் தேதி துவங்கி தற்போது வெகுவிமர்சையாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவருகின்றன. இது ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவடைகிறது. முன்னதாக இந்திய பளு தூக்கும் வீராங்கனை சானு மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தார். இதேபோல உலக நாடுகள் பலவற்றில் இருந்து பல்வேறு வீரர்கள் டோக்கியோவில் போட்டிகளில்
Tokyo Olympic, Organisers,COVID-19, Measures, Daily Cases, Spike

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 23ம் தேதி துவங்கி தற்போது வெகுவிமர்சையாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவருகின்றன. இது ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவடைகிறது. முன்னதாக இந்திய பளு தூக்கும் வீராங்கனை சானு மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தார். இதேபோல உலக நாடுகள் பலவற்றில் இருந்து பல்வேறு வீரர்கள் டோக்கியோவில் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

வீரர்களைப் பரிசோதித்தபோது 24 பேருக்கு வைரஸ் தாக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஒலிம்பிக் நிர்வாகக்குழு தினசரி பிசிஆர் பரிசோதனையை கட்டாயமாக்கி உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் ஜப்பானுக்கு வந்து தங்கள் நாட்டில் கொரோனாவைப் பரப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை ஒலிம்பிக் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். வீரர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


latest tamil news


ஆனால் தலைநகர் டோக்கியோவில் நாளுக்குநாள் வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நேற்றுவரை 9 ஆயிரத்து 183 புதிய நோயாளிகள் உருவாகியுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்தி தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் நிர்வாகிகள், வீரர்கள் ஆகியோரால் வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என்னும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X