கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா ரூ.30 லட்சம் அபராதம்: சட்டத்தை மீறியதாக புகார்| Dinamalar

கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா ரூ.30 லட்சம் அபராதம்: சட்டத்தை மீறியதாக புகார்

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (4)
Share
மாஸ்கோ: தனிப்பட்ட தகவல்கள் சட்டத்தை மீறியதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.ரஷ்ய அரசுக்கும் அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்கும் கடந்த சில மாதங்களாக உரசல் ஏற்பட்டுள்ளது. புடினை நீண்டகால அதிபராக கொண்டிருக்கும் ரஷ்யாவில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் எதிர்க்கட்சியினர்
கூகுள், ரஷ்யா ,அபராதம்

மாஸ்கோ: தனிப்பட்ட தகவல்கள் சட்டத்தை மீறியதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.

ரஷ்ய அரசுக்கும் அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்கும் கடந்த சில மாதங்களாக உரசல் ஏற்பட்டுள்ளது. புடினை நீண்டகால அதிபராக கொண்டிருக்கும் ரஷ்யாவில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதனை உடனுக்குடன் தடுத்துவிடும் வேலையை செய்கிறது ரஷ்யா. முன்னதாக தடை செய்யப்பட்ட கருத்துக்களை அனுமதித்ததாக கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அபராதம் விதித்தது.


latest tamil news




இந்நிலையில் தற்போது தனிப்பட்ட தகவல்கள் சட்டத்தை கூகுள் மீறிவிட்டதாக ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். உள்ளூரில் அலுவலகம் தொடங்கி ரஷ்ய பயனர்களின் தகவல்களை அங்கேயே சேமிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதனை நடைமுறைப்படுத்தாததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களுக்கும், தடை செய்த கருத்துக்களை அனுமதித்ததாக கூறி தொடர்ச்சியாக அபராதம் விதிக்கிறது ரஷ்யா.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X