சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் சாவில் மர்மம்: தந்தை புகார்

Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த காடுமுச்சந்திரத்தை சேர்ந்தவர் மாரேகவுடா, 34, கூலித்தொழிலாளி; இவரது மனைவி பாரதி, 28; இவர்களுக்கு, 10 ஆண்டுக்கு முன் திருமணமானது. இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், பாரதி சடலமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். பாரதியின் தந்தை பைரப்பா

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த காடுமுச்சந்திரத்தை சேர்ந்தவர் மாரேகவுடா, 34, கூலித்தொழிலாளி; இவரது மனைவி பாரதி, 28; இவர்களுக்கு, 10 ஆண்டுக்கு முன் திருமணமானது. இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், பாரதி சடலமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். பாரதியின் தந்தை பைரப்பா புகாரின்படி, தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதில், காடுமுச்சந்திரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, மனைவி பாரதியை, மாரேகவுடா அடித்தது தெரிந்தது. மேலும், மாரேகவுடா மற்றும் அவரது தந்தை சிக்கமுனியப்பா, 58, ஆகியோர் தாக்கியதால், பாரதி உயிரிழந்திருக்கலாம் என, அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுவதால், சந்தேக மரணம் என, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், சந்தேகத்தின்படி, மாரேகவுடா, அவரது தந்தை சிக்கமுனியப்பா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் தான், சாவிற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X