கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்பு: இருவர் கைது| Dinamalar

கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்பு: இருவர் கைது

Added : ஜூலை 29, 2021
Share
பெங்களூரு: முறைகேடாக பல்வேறு மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுவர்களை, தென்மேற்கு ரயில்வே துறை பாதுகாப்பு படையினர் மீட்டனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.யஷ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையங்களில் கடந்த ஏழு நாட்களாக, பாதுகாப்பு படையினர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின்போது, அசாம், பீஹார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து மூன்று சிறுமிகள்

பெங்களூரு: முறைகேடாக பல்வேறு மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுவர்களை, தென்மேற்கு ரயில்வே துறை பாதுகாப்பு படையினர் மீட்டனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.
யஷ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையங்களில் கடந்த ஏழு நாட்களாக, பாதுகாப்பு படையினர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின்போது, அசாம், பீஹார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து மூன்று சிறுமிகள் உட்பட ஏழு பேரை, ரயில் நிலையங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு முறைகேடாக அழைத்து வந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்று, முறையான ஆவணங்கள் இல்லாமல் மதுபாட்டில்கள் கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X