மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு : ஸ்டாலின் வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு : ஸ்டாலின் வாழ்த்து

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (19)
Share
மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு செய்துள்ளமத்திய அரசுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு செய்துள்ளமத்திய அரசுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது சமூக நீதி போராட்டத்திற்கான முதல் வெற்றி.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இட ஒட ஒதுக்கீட்டு அறிவிப்பின்படி எம்.பி.பி.எஸ்.,சிற்கு 1,500 இடங்களும் முதுகலை எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு 2500 இடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் இடங்கள் கிடைக்கப்பெறும்


latest tamil news



மத்திய அரசின் பணிகள் மற்றும்கல்விநிலையங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. தற்போது 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் படி ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கிடு செய்யப்பட வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கையாகும். அத்தகைய சமூக நீதியை அடையும் வரை தி.மு.க., தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X