தமிழகத்தில் மேலும் 1,859 பேருக்கு கோவிட்: 2,145 பேர் நலம்

Updated : ஜூலை 30, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1,858 பேரும் மற்ற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,859 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,145 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 57,074 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன.

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1,858 பேரும் மற்ற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,859 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,145 பேர் குணமடைந்து உள்ளனர்.latest tamil news
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 57,074 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,859 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,71,28,408 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,053 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,93,142 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,62,484 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,145 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக உயர்ந்துள்ளது.

28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மாவட்ட வாரியாக விபரம்


latest tamil newslatest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-ஜூலை-202109:02:23 IST Report Abuse
duruvasar தமிழகத்தில் மட்டுமில்லாது நாடு முழுவதிலும் தொற்றை குறைத்த விடியல் நாயகன் வாழ்க.
Rate this:
Cancel
Rajagopal Subramaniam - Chennai,இந்தியா
30-ஜூலை-202108:54:34 IST Report Abuse
Rajagopal Subramaniam எச்சரிக்கை தேவை - கவனம் தேவை - பீதி தேவை இல்லை. சென்னையில் கொரோனா விவரம். படிப்படியாக ஒரு மாதம் முன்பு 400ஆக இருந்த சென்னையில் தினசரி கொரோனா தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆம் தேதி 126ஆக குறைந்தது. ஆனால். 26ஆம் தேதி 122 27ஆம் தேதி சிறிது உயர்ந்து 139 ஆயிற்று. 28 ஆம் தேதி சிறிது உயர்ந்து 164 ஆகிவிட்டது. 29 ஆம் தேதி சிறிது உயர்ந்து 181 ஆகிவிட்டது. கவனம் தேவை - பீதி தேவை இல்லை.
Rate this:
Cancel
29-ஜூலை-202122:28:23 IST Report Abuse
விஜய், கோவை மறுபடியும் முதல்ல இருந்தா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X