பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
மேட்டூர்: கர்நாடகா அணைகளின் நீர் திறப்பு குறைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து, 29 ஆயிரத்து, 666 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீரால், சில நாளாக மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. இரு நாளாக, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கனஅடியாக இருந்த

மேட்டூர்: கர்நாடகா அணைகளின் நீர் திறப்பு குறைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து, 29 ஆயிரத்து, 666 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீரால், சில நாளாக மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. இரு நாளாக, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, நேற்று, 22 ஆயிரத்து, 249 கனஅடியாக சரிந்தது. வினாடிக்கு, 27 ஆயிரத்து, 280 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று, 19 ஆயிரத்து, 108 கனஅடியாக சரிந்தது. இரு அணைகளில் நேற்று, 32 ஆயிரத்து, 500 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. நீர்திறப்பு குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 34 ஆயிரத்து, 141 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 29 ஆயிரத்து, 666 கனஅடியாக சரிந்தது. பாசனத்துக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம், 77.43 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 79.16 அடியாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X