பொது செய்தி

தமிழ்நாடு

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
சேலம்: ''வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளனர். இதை திசைதிருப்பவே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' நடத்தி பொய் வழக்கு போடப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்தக்கோரி, தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர், நேற்று

சேலம்: ''வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளனர். இதை திசைதிருப்பவே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' நடத்தி பொய் வழக்கு போடப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.


தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்தக்கோரி, தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள் முதல்வர், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த, 505 அறிவிப்புகளில், 'நீட்' தேர்வு, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் தி.மு.க., அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது பேசினார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல் விலை, 5 ரூபாய், டீசல் விலை, 4 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதி என்ன ஆனது? அ.தி.மு.க., ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதை அரசு உடனே சரிசெய்ய வேண்டும். மின் கணக்கீடு முறையில் ஏகப்பட்ட குளறுபடி நடப்பதாக தமிழகம் முழுதும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதை, உடனே அரசு சரிசெய்ய வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளனர். இதை திசைதிருப்பவே, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீடுகளில், 'ரெய்டு' நடத்தி பொய் வழக்கு போடப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் உரிய முறையில் இடஒதுக்கீடு கிடைக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை நடத்த அரசு முன்வர வேண்டும். ஊடகங்கள், ஆளுங்கட்சிக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிக்கும் அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்குரிய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X