சீனா கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா: இடதுசாரிகள், தி.மு.க., பங்கேற்பு

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
புது டில்லி: டில்லியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தி.மு.க., பங்கேற்றதாக சீன தூதரகம் தெரிவித்தது. செவ்வாயன்று நடந்த இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தி.மு.க.,வின்

புது டில்லி: டில்லியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தி.மு.க., பங்கேற்றதாக சீன தூதரகம் தெரிவித்தது.



latest tamil news



செவ்வாயன்று நடந்த இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தி.மு.க.,வின் தர்மபுரி எம்.பி., செந்தில் குமார், அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் மத்தியக் குழுவின் செயலர் ஜி.தேவராஜன் ஆகியோர் பங்கேற்றதாக சீன தூதரகம் தெரிவித்தது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜாவிடம் கேட்டபோது அதனை உறுதிப்படுத்தினார். மேலும் அது பற்றி கூறியவர், “இரண்டு நாட்களுக்கு முன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை ஆலோசகர் டூ சிவோலின் உடன் பங்கேற்றோம். எங்களது வாழ்த்துக்களை தெரிவித்தோம்.” என்றார்.


latest tamil news



அந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீன தூதர் பேசியதாவது: 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்துச் செய்திகளையும் கடிதங்களையும் அனுப்பியுள்ளன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய பார்வார்டு பிளாக் ஆகியவை அடங்கும். சீனா - இந்தியா உறவு இப்பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இருதரப்பு உறவுகளை நாம் இன்னும் விரிவான மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
30-ஜூலை-202114:33:00 IST Report Abuse
Vaduvooraan சீனா படையெடுப்பின் போது அவர்கள் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக தீர்மானம் போட்ட பெரிய தேசபக்த இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சி. இன்னும் தடை செய்யப்படாமல் இருந்து கோண்டிருக்கிறது முதுகெலும்பு இல்லாத இந்திய ஜனநாயகம் .
Rate this:
Cancel
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-202111:10:54 IST Report Abuse
JAGADEESANRAJAMANI நமது ராணுவவீரர்களை கொன்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தேசதுரோகிகள்.
Rate this:
Cancel
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
30-ஜூலை-202110:22:35 IST Report Abuse
R MURALIDHARAN நமது இடத்தை அக்கிரமித்து, நமது வீரர்களை கொன்ற சீன ராணுவத்திற்கு தலைமையேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில், தி மு க கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டது தேசவிரோதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X