கொரோனாவால் தமிழகத்தில் ஆதரவிழந்த 4,829 குழந்தைகள்

Updated : ஜூலை 31, 2021 | Added : ஜூலை 29, 2021
Share
Advertisement
புதுடில்லி:'தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 4,829 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்' என, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் தான் நம் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியது. ஜூலை 23 வரை
கொரோனா,தமிழகம்,  ஆதரவு, இழப்பு, 4,829 குழந்தைகள்

புதுடில்லி:'தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 4,829 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்' என, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் தான் நம் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியது. ஜூலை 23 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுதும் 6,855 குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்துஉள்ளனர். மேலும், 68 ஆயிரத்து 218 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 247 குழந்தைகள் ஆதரிக்க யாருமின்றி கைவிடப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிராவில், 13 ஆயிரத்து 589 குழந்தைகளும்; தமிழகத்தில், 4,829 குழந்தைகளும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழந்துள்ளனர். தமிழகத்தில், 150 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், உதவிகள் பற்றிய விபரங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆக., 23க்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆதரவை இழந்த குழந்தைகள் ஏற்கனவே தாங்கள் படித்த பள்ளியிலேயே கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X